25 கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் நிலத்தை அதிகாரிகள் மீட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட தம்மத்து கோணம் என்ற பகுதியில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுடன் இணைந்த சுக்கிரவார கட்டளைக்கு சொந்தமான இடம் அமைந்துள்ளது. இந்நிலையில் 3.16 ஏக்கர் நிலத்தை அறநிலையத்துறை தாசில்தார் சஜித் தலைமையில் ஒப்பந்தல் கோவில் செயல் அலுவலர் பொன்னி, பணியாளர் ஐயப்பன் ஆகியோர் முன்னிலையில் நில அளவையாளர்கள் ராகேஷ், அஜித் ஆகியோர் சுமார் 25 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை மீட்டனர். இதனை அடுத்து அங்கு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. மேலும் பொது ஏலம் மூலம் நிலத்தை குத்தகைக்கு விட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.