Categories
சினிமா தமிழ் சினிமா

25 நாட்கள் நடிக்க….. ரூ.1.50 கோடி கேட்கும் யோகிபாபு….. அப்ப அவர் காட்டுல மழை தா….!!!!

25 நாட்கள் நடிக்க ரூபாய் 1.50 கோடி சம்பளம் கேட்டாராம் நகைச்சுவை நடிகர் யோகி பாபு.

நகைச்சுவை நடிகராக தனது வாழ்க்கைப் பயணத்தை தொடங்கிய யோகிபாபு, தற்போது பல்வேறு படங்களில் ஹீரோவாக பிசியாக நடித்து வருகிறார். சமீபத்தில் ஏப்ரல் 13 ஆம் தேதி நடிகர் விஜய் நடிப்பில் உருவான பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது அவர் ஒரு படத்தில் இருபத்தி ஐந்து நாட்கள் மட்டும் நடிப்பதற்கு ஒன்றரை கோடி ரூபாய் சம்பளம் கேட்டாராம்.

அதற்கு அப்படத்தின் தயாரிப்பாளர் ஓகே சொல்லிவிட்டாராம். இப்படத்தில் முன்னணி நடிகர் ஒருவர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்ற பழமொழிக்கு ஏற்ப யோகிபாபு தனது சம்பளத்தை கேட்கிறார் போல என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |