ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஆறு வயது சிறுமி 108 ஆன்மீக மந்திரங்களை 24 நிமிடங்களில் உச்சரித்து இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம் பிடித்துள்ளார்.
ஒடிசா மாநிலம் ஜகத்சிங்பூர் மாவட்டம் தாரதாபடா கிராமத்தை சேர்ந்த 6 வயது சிறுமி ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தாரதாபடா கிராமத்தை சேர்ந்த பிரபல கல்வியாளரான ராஷ்மி ரஞ்சன் மிஸ்ராவின் பேத்தி டி சாய் ஷ்ரேயான்ஸி ஆவார். இவருக்கு சிறு வயது முதலே வீட்டில் நடைபெறும் வாராந்திர பூஜையின்போது மதப் பெரியவர்கள் உச்சரிக்கும் மந்திரங்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டார்.
இதனால் அதை விருப்பப்பட்டு கற்றுக்கொண்டார். இந்நிலையில் தற்போது 108 ஆன்மீக மந்திரங்களை மொத்தம் 24 நிமிடங்கள் 50 வினாடிகள் உச்சரித்து, இந்தியபுக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் இவர் சிறுவயது முதலே 1330 திருக்குறளை நேராகவும், தலைகீழாகவும் ஒப்பிப்பது, கொடிகளை பார்த்து அது எந்த நாட்டுடையது என்பதை சொல்வது போன்ற சாதனைகளை படைத்துள்ளார். அவர் மந்திரங்களை உச்சரிக்கும் வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.