Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“25 வயது இளைஞரால் கர்ப்பமான 40 வயது பெண்”…..! திருமண புகைப்படத்தை காட்டி….. முதல் கணவரை கதறவிட்ட கொடுமை….!!!!

தஞ்சை ஒரத்தநாடு அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 40 வயது பெண் 25 வயதில் இளைஞருடன் ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவரின் மனைவிக்கு 40 வயதாகிறது. இவர்களுக்கு 22 மற்றும் 21 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். தன் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக குடும்பத் தலைவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூருக்கு சென்று விட்டார். அங்கு சென்று அவர் தனது குடும்பத்திற்காக கஷ்டப்பட்டு பணம் சம்பாதித்து வீட்டிற்கு அனுப்பி வந்தார். மகன்களின் படிப்புக்காக அந்த பெண் தங்கள் கிராமத்தில் இருந்து ஒரத்த நாட்டுக்கு வந்து ஒரு வீட்டை வாடகை பிடித்து அதில் மகனுடன் வசித்து வந்தார்.

அந்தப் பெண்ணின் மூத்த மகன் இன்ஜினியரிங் படித்து முடித்துவிட்டு அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இளைய மகன் கல்லூரி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். மகன்கள் இருவரும் வேலை படிப்புக்காக தினமும் பகல் பொழுது முழுவதும் வீட்டை விட்டு வெளியில் சென்று விடுவதால், வீட்டில் தனியாக இருந்த இந்த பெண் முகநூல் மூலமாக பல்வேறு நண்பர்களுடன் பேசி வந்துள்ளார். அப்போது கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 25 வயது வாலிபருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது. ஆனால் அந்த வாலிபர் இடத்தில் நான் திருமணம் ஆனவள் என்பதையும், தனக்கு திருமண வயதில் இரண்டு மகன்கள் இருப்பதையும் மறந்துவிட்டு இருவரும் மணிக்கணத்தில் பேசி வந்துள்ளனர்.

தன்னை அலங்கரித்து கவர்ச்சியான புகைப்படங்களை எடுத்து அந்த வாலிபருக்கு அனுப்பி வைத்து அந்த வாலிபரை மயக்கியுள்ளார். இதனால் அந்த வாலிபர் தனது சொந்த ஊரிலிருந்து தனது குடும்பத்திற்கு தெரியாமல் ஒரத்த நாட்டுக்கு வந்து வாடகை ஆட்டோ ஓட்டி வந்தார். ஆட்டோ ஓட்டிய நேரம் போக மற்ற நேரங்களில் அந்தப் பெண்ணை யாருக்கும் தெரியாமல் சந்தித்துள்ளார். மகன்கள் இருவரும் வீட்டில் இல்லாத நேரத்தில் இருவரும் தனியாக சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இதனால் அந்த பெண் கர்ப்பமாகியுள்ளார். அதன் பிறகு அந்தப் பெண் கள்ளக்காதலுடன் செல்ல முடிவெடுத்தார். தனது மகன்களுக்கு விவரம் தெரியும் முன்பாகவே கள்ளக்காதலுடன் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்த அந்த பெண் தனது கணவர் சம்பாதித்து வாங்கிக் கொடுத்த நகை, பணம் ஆகிவற்றை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து தனது தாய் வீட்டில் இல்லாததை பார்த்து அதிர்ச்சி அடைந்த மகன்கள், பல இடங்களில் தேடியுள்ளனர். இது தொடர்பாக தனது தந்தைக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் அந்த பெண்ணின் மூத்த மகன் காவல்துறையில் புகார் கொடுக்க தனது தாயார் வீட்டிலிருந்து மாயமாக்கி விட்டதும், வீட்டில் உள்ள நகை பணங்கள் காணவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது. இதையெல்லாம் பற்றி சற்றும் கவலை கொள்ளாத அந்த பெண் கடலூரில் உள்ள ஒரு கோவிலில் வைத்து கள்ளக்காதலனை திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் அதனோடு சேர்த்து ஒரு ஆடியோ பதிவையும் வெளிநாட்டில் உள்ள தனது கணவருக்கு அனுப்பி வைத்துள்ளார். அதில் தான் கடலூரை சேர்ந்த வாலிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டதாகவும், நான் தற்போது நான்கு மாத கர்ப்பிணியாக இருப்பதாகவும் அவருடன் சேர்ந்து வாழ உள்ளதாக தெரிவித்துள்ளார். தனது மனைவி அனுப்பி இருந்த புகைப்படங்களை பார்த்து கணவர் மிகுந்த வேதனை அடைந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |