வடக்கு அயர்லாந்து இன்னும் 25 வருடத்திற்குள் தனி நாடாக மாறக்கூடும் என்று புதிய கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது.
வடக்கு அயர்லாந்து பிபிசியின் ஸ்பாட்லைட் நிகழ்ச்சியின் மூலம் ஐரிஷ் எல்லையின் இருபுறமும் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்நிலையில் இங்கிலாந்தின் ஒரு பகுதியாக இன்னும் 10 வருடங்களுக்கு வடக்கு அயர்லாந்து இருந்தாலும், 25 வருடங்களுக்குள் அது பிரிந்து சென்றுவிடும் என்று அந்த கருத்துக்கணிப்பில் கூறியுள்ளனர். இந்த கருத்துக்கணிப்பு நடைபெற்ற போது 49 சதவீதத்தினர் இங்கிலாந்துடன் இணைந்திருக்க தங்களது விருப்பத்தினை தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அயர்லாந்துடன் இணைந்து ஐக்கிய அயர்லாந்தாக மாற விரும்புவதாக 43 சதவீதத்தினர் விருப்பம் தெரிவித்துள்ளனர். இவர்களை தவிர மீதமுள்ள 8 சதவீதத்தினர் கருத்துக் கணிப்பு குறித்து எந்தவித விருப்பத்தையும் தெரிவிக்கவில்லை. இதனை போலவே அயர்லாந்தின் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கருத்துகணிப்பு நடத்தப்பட்டபோது அயர்லாந்துக்கு ஆதரவாக 51 சதவீதத்தினர் தங்களது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதனையடுத்து தாங்கள் பிரித்தானியாவுடனே இணைந்து இருக்க விரும்புவதாக 57 சதவீதத்தினர் தங்களது விருப்பத்தை தெரிவித்துள்ளனர். இவர்களை தவிர மீதமுள்ள 20 சதவீதத்தினர் தங்களுக்கு எந்தவித விருப்பமும் இல்லை என்று பதிலளித்துள்ளனர். இந்நிலையில் இந்த கருத்துக்கணிப்பில் வடக்கு அயர்லாந்து இங்கிலாந்தின் ஒரு பகுதியாக அடுத்த 10 ஆண்டுகளில் இருக்குமா என்று கேள்வி கேட்கப்பட்டபோது அயர்லாந்து குடியரசை சேர்ந்த 59 சதவீதத்தினரும், வடக்கு அயர்லாந்தை சேர்ந்த 55 சதவீதத்தினரும் அதற்கு ஆம் என்று பதிலளித்துள்ளனர். மேலும் இது போன்ற நிலை அடுத்த 25 ஆண்டுகளில் இருக்குமா என்று கேட்கப்பட்டபோது அயர்லாந்து குடியரசை சேர்ந்த 54 சதவீதத்தினரும், வடக்கு அயர்லாந்தை சேர்ந்த 51 சதவீதத்தினரும் வடக்கு அயர்லாந்து இங்கிலாந்தை விட்டு வெளியேறி விடும் என்று அந்த கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளனர்.