நாளுக்குள் கடவுள் நம்பிக்கையுடன் இணைந்து ராசி பலன்களும் மக்கள் என்ன ஓட்டத்தில் பிரதி பலிக்கின்றது . நம்முடைய வீட்டிலும் , குடும்பத்தில் எந்த செயலை தொடங்கினாலும் நல்ல நேரம், ராசி என்னவெண்று தெரிந்து கொள்ள தினம் தினம் நாள்கட்டியில் கண்டு கழிக்கும் பழக்கம் பலருக்கும் இருந்து வருகின்றது. இந்த நிலையில் மேஷ ராசி முதல் மீனம் ராசி வரை உள்ள 12 ராசிகளின் ராசிபலனை தெரிந்து கொள்ளலாம்.
மேஷம் :
துடிப்புடனும் துணிச்சலுடனும் செயல்படக்கூடிய மேஷராசி அன்பர்களே..!! இன்று இன்னல்கள் தீர இறைவனை வழிபட வேண்டிய நாளாக இருக்கும். எதையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்வது நல்லது. திட்டமிட்ட காரியம் ஒன்று நடைபெறாமலே போகலாம். பணியாளர்களால் தொல்லை ஏற்படும். இன்று குறையாக நின்ற பணிகள் சிக்கலின்றி நடைபெறும். கொடுக்கல்-வாங்கல் ஒழுங்காக இருக்கும். தொழிலில் பயணங்களால் பொருள் சேர்க்கை ஏற்படும். சகோதரத்தின் வெளிநாடு பயணம் இனிதே நடைபெறும். சுயசார்பும் தன்னிறைவும் பெறுவீர்கள். இன்று குடும்ப பிரச்சினைகள் ஓரளவு நல்ல முடிவை கொடுக்கும். செலவுக்கேற்ற வரவுகள் வந்து சேரும் .
கைவிட்டு போன பொருட்கள் உங்களிடமே வந்து சேரும். இன்றைய நாள் ஓரளவு சிறப்பாகவே காணப்படும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும் படித்த பாடத்தை மட்டும் ஒரு முறைக்கு இரு முறை எழுதிப் பாருங்கள். மிகவும் சிறப்பாக இருக்கும். நினைவில் வைத்துக் கொள்ள உதவும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுதோ, முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுதோ ஆரஞ்சு நிற ஆடை அல்லது ஆரஞ்சு நிறத்தில் கைக்குட்டையோ எடுத்துச் செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாகவே இருக்கும். அதுபோலவே காலையில் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் சிறப்பை கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் ஆரஞ்சு நிறம்
ரிஷபம் :
தன்னிச்சையாக முடிவுகளை எடுத்து சாதனை படைக்கக் கூடிய ரிஷப ராசி அன்பர்களே..!! இன்று சொந்தங்களால் வந்த தொல்லைகள் அகலும். நிதானத்துடன் செயல்படுவதால் நிம்மதி ஏற்படும். வருங்கால நலன்கருதி புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். புது வாழ்வில் முக்கிய பொறுப்புகள் வந்து சேரும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் செயல் திறமை வெளிப்படும். சுதந்திரமாக செயல்படும் வாய்ப்புகளும் கிடைக்கும். வரவேண்டிய பணம் வந்துசேரும். மேலிடத்திலிருந்து வந்த கருத்து மோதல்கள் விலகிச்செல்லும். இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும். கணவன் மனைவி இருவரும் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மையை கொடுப்பதாக இருக்கும்.
பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொடுத்து திருப்தி அடைவீ ர்கள். இன்றைய நாள் ஓரளவு மகிழ்ச்சியாகவே காணப்படுவீர்கள். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். சக மாணவரிடம் பழகும் போது மட்டும் கொஞ்சம் கவனமாக பழகுங்கள் பொறுமையை கையாளுங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுதோ முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுதோ சிவப்பு நிற ஆடை அல்லது சிவப்பு நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள் அனைத்தும் சிறப்பாக நடக்கும். அதுபோலவே நீங்கள் காலையில் எழுந்ததும் காக்கைக்கு உணவு வைத்து விட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்துமே நல்லபடியாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்
மிதுனம் :
அடிக்கடி காதலில் வயப்படக்கூடிய மிதுனராசி அன்பர்களே..!! இன்று விஐபிக்களின் சந்திப்பால் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். வீடு இடம் வாங்கும் முயற்சி கைகூடும். அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். வாங்கல்- கொடுக்கல்களில் ஆதாயம் கிடைக்கும். இன்று அடுத்தவர்களுக்காக எந்த பொறுப்பையும் ஏற்காமல் இருப்பது நல்லது. நண்பர்கள் உறவினரிடம் இருந்து வந்த பிரச்சனைகள் விலகி செல்லும். பெண்களால் இருந்த தொல்லைகள் மறைந்து நிம்மதி பிறக்கும். பண தேவைகள் ஓரளவு பூர்த்தியாகும். அண்டை அயலாரின் ஆதரவு கிடைக்கும். குறுகிய பயணங்கள் அதிகரிக்கும்.
பயணங்களின் பொழுது மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள். பொருட்கள் மீது கவனமாக இருங்கள். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். இன்று ஆசிரியர்களின் சொல்படி மட்டும் நடந்து கொள்ளுங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போதோ முக்கியமான காரியத்திற்கு செல்லும்போதோ பச்சை நிற ஆடை அல்லது பச்சை நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்தும் நல்லபடியாகவே நடக்கும். அதுபோல இன்று நீங்கள் காலையில் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்தும் சிறப்பாக இருக்கும். தயவுசெய்து இதை மட்டும் நீங்கள் முயற்சி செய்து பாருங்கள்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் பச்சை நிறம்
கடகம் :
தனது இரு கண்களின் கவர்ச்சியால் அனைவரையும் கவரக்கூடிய கடகராசி அன்பர்களே..!! இன்று கடன் சுமை குறையும் நாளாக இருக்கும். காலை நேரத்திலேயே நல்ல தகவல்கள் வந்துசேரும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புதிய சொத்துக்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். இன்று புதிய வாய்ப்புகள் வந்து சேரும். சிலருக்கு வெளிநாடு வாய்ப்புகள் வரக்கூடும். அரசியல்வாதிகளுக்கு அலைச்சல் கொஞ்சம் இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் திண்டாட வேண்டிய சூழல் இருக்கும். உங்களுடைய எதிரிகள் மீது நீங்கள் ஆத்திரம் கொள்ள வேண்டாம், பொறுமையை மட்டும் கடைபிடியுங்கள்.
மாணவர்களுக்கு புதியதாக கல்வி பயில ஆனந்தம் ஏற்படும். நல்ல நட்பு வட்டாரமும் கிடைக்கும். சக மாணவரிடம் பழகும் போது கவனமாக பழகுங்கள். இன்று நீங்கள் வெளியிடங்களுக்கு செல்லும் போது முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது வெள்ளை நநிற ஆடையோ அல்லது வெள்ளை நிறத்தில் கைக்குட்டையோ எடுத்துச் செல்லுங்கள். அனைத்தும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே நீங்கள் காலையில் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்தும் சிறப்பாகவே நடக்கும். தயவுசெய்து இதை மட்டும் நீங்கள் செய்து பாருங்கள்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4 மற்றும் 8
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் ஊதா நிறம்
சிம்மம் :
அனைத்து விஷயங்களையும் ஆராய்ந்து பார்த்து சிந்தித்து செயல்படக்கூடிய சிம்ம ராசி அன்பர்களே..!! இன்று சங்கடங்களை சாதூர்யமாக சமாளிப்பீர்கள். சேமிப்பை உயர்த்துவதற்கான முயற்சிகள் கைகூடும். வாகன பராமரிப்பிற்காக ஒரு தொகையைச் செலவிட்டு மகிழ்வீர்கள். தாய் வழி ஆதரவில் இருந்த தடைகள் விலகி செல்லும். இன்று குடும்பத்தில் தந்தைக்கு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். தங்களுக்கு வரவேண்டிய பணம் வந்துசேரும். சுபகாரிய விஷயமாக வெளியூர் செல்ல நேரலாம். பெண்கள் வாழ்வில் குதூகலம் பிறக்கும். இல்லத்தில் அனைவரின் ஒத்துழைப்பும் கிடைக்கப்பெறும். புதிய ஒப்பந்தங்கள் கைகொடுக்கும்.
எந்த முயற்சியும் தயக்கமின்றி நீங்கள் செய்யலாம். நட்பு வட்டம் பெருகும். மனமகிழ்ச்சி ஏற்படும். குடும்பத்தில் கலகலப்பு உண்டாகும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். ஆசிரியர்களின் சொல்படி மட்டும் நடந்து கொள்ளுங்கள். சக மாணவருடன் ஒற்றுமையாக நடந்து கொள்ளுங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போதோ முக்கியமான காரியத்திற்கு செல்லும் போதோ சிவப்பு நிற ஆடை அல்லது சிவப்பு நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்தும் சிறப்பாகவே இருக்கும். அதுபோலவே நீங்கள் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்தும் வெற்றி பெறக் கூடிய சூழல் இருக்கும். தயவுசெய்து இதை மட்டும் நீங்கள் முயற்சி செய்து பாருங்கள்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்
கன்னி :
கடவுளின் அருளை பரிபூரணமாக பெற்று கொண்ட கன்னி ராசி அன்பர்களே.!! இன்று செல்வ நிலை உயரும் நாளாக இருக்கும். ஆதரவுக்கரம் நீட்டுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். சகோதர வழி பிரச்சினைகள் அகலும். தொழில் முன்னேற்றத்திற்காக முக்கிய புள்ளிகளைச் சந்தித்து முடிவுகளை எடுப்பீர்கள். இன்று கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். பொருள் வரவு கூடும். பயணம் செல்ல நேரிடும். கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம். பயணங்கள் செல்ல நேரிடும். மன திருப்தியுடன் செயலாற்றுவீர்கள். புத்தி சாதுரியம் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதன் மூலம் மற்றவரிடம் மதிப்பு கூடும்.
இன்றைய நாள் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். பாடங்களில் மட்டும் கவனத்தை செலுத்துவது மிகவும் நல்லது. விளையாட்டை ஏறக்கட்டி விட்டு பாடத்தில் முழு கவனம் செலுத்துங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது முக்கியமான காரியத்திற்கு செல்லும் போது சிவப்பு நிற ஆடையோ அல்லது சிவப்பு நிறத்தில் கைக்குட்டையோ எடுத்துச் செல்லுங்கள். அனைத்து காரியம் நல்லபடியாக நடக்கும். அதுபோலவே நீங்கள் காலையில் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்து விஷயங்களும் வெற்றி வாய்ப்பைக் கொடுக்கும். தயவுசெய்து இதை மட்டும் நீங்கள் முயற்சி செய்து பாருங்கள்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்
துலாம் :
கடுமையான உழைப்பாலும் அதிகபடியான முயற்சியாளும் வெற்றி பெறக்கூடிய துலாம் ராசி அன்பர்களே..!! இன்று தன வரவு திருப்திகரமாக இருக்கும். தன்னம்பிக்கையோடு பணிபுரிவீர்கள். சுப செய்தி ஒன்று சுற்றத்தார் மூலம் வந்து சேரும். பயணம் பலன் தரக்கூடியதாக இருக்கும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். இன்று வீட்டை விட்டு வெளியே தங்க நேரிடும். திடீர் செலவு கொஞ்சம் ஏற்படும். அடுத்தவர்களுக்கு எவ்வளவு நல்லது செய்தாலும் அது எடுபடாமல் போகும். பொருள் வரவு அதிகரிக்கும். வாகனம், பூமி மூலம் நல்ல லாபம் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான சூழல் இருக்கும். பல தடைகளை தாண்டி செயல்பட வேண்டியிருக்கும். எதிர்பார்த்த லாபம் வரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஆர்டர்கள் கைக்கு வந்து சேரும்.
இன்று நீங்கள் மனம் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். குடும்பத்தாருடன் கலகலப்பாக காணப்படுவீர்கள். இன்றைய நாள் ஓரளவு வெற்றி பெறும் நாளாகவே இருக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை அடைய கூடும். வெற்றி வாய்ப்புகள் வந்து சேரும். கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது, முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுது பச்சை நிற ஆடை அல்லது பச்சை நிறத்தில் கைக்குட்டையோ எடுத்துச் செல்லுங்கள். அனைத்தும் சிறப்பை கொடுப்பதாக இருக்கும். அதுபோலவே நீங்கள் மிக முக்கியமாக காலையில் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்து விதத்திலும் வெற்றி வாய்ப்புகள் வந்து சேரும். தயவுசெய்து இதை மட்டும் செய்து பாருங்கள். எப்படி இருப்பீர்கள் என்று நீங்களே தெரிந்து கொள்வீர்கள்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் சிவப்பு நிறம்
விருச்சிகம் :
தனது சுய புத்தியால் முன்னேற்றமான சூழ்நிலையில் காணக்கூடிய விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று நீங்கள் எடுத்த முடிவை திடீரென மாற்றியமைத்துக் கொள்வீர்கள். ஏராளமான செலவுகள் வருகின்றது என்று கவலைப்படுவீர்கள். அலைச்சல் அதிகரிக்கும். உடல் நிலையில் சின்னதாக மாற்றம் ஏற்படும். மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும். இன்று மற்றவருக்கு உதவ போய் வீண் பிரச்சனையில் மாட்டிக் கொள்ள வேண்டாம். கவனம் இருக்கட்டும். இன்று உங்கள் பெயர் புகழ் கௌரவம் யாவும் உங்களை தேடி வரக்கூடும். கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலும் பெரிய கெடுதல்கள் ஏற்படாது. உங்கள் எண்ணம் போல் உங்களது வாழ்க்கை அமையும். உங்கள் பேச்சுக்கு மதிப்பு மரியாதை உயரும். கலைத்துறையினருக்கு உற்சாகமாக ஈடுபட்டு வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பீர்கள்.
அனைவரின் பாராட்டுகளையும் இன்று நீங்கள் பெறுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை இருக்கும். பழைய பிரச்சினைகள் தீரும் நாளாகவும் இருக்கும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் அடைய கூடும். கல்வியில் அதிகப்படியான ஆர்வம் இருக்கும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுது ஆரஞ்சு நிற ஆடை அல்லது ஆரஞ்சு நிறத்தில் கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்து விஷயங்களும் சிறப்பாக இருக்கும். நல்லபடியாக நடக்கும். அதுபோலவே நீங்கள் மிக முக்கியமாக காலையில் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு செல்லுங்கள். நீங்கள் செய்யக்கூடிய காரியங்கள் வெற்றி ஏற்படும். தயவுசெய்து இதை மட்டும் செய்து பாருங்கள். நீங்கள் மனமகிழ்ச்சி கொள்வீர்கள்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்
தனுசு :
தக்க சமயத்தில் அனைவருக்கும் உதவிகளை செய்து மகிழ்ச்சியில் ஆழ்த்த கூடிய தனுசுராசி அன்பர்களே..!! இன்று உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைத்து மகிழும் நாள் ஆக இருக்கும். மதி நுட்பத்தால் மகத்தான காரியம் ஒன்றை செய்து முடிப்பீர்கள். வெளிநாட்டு பயணங்கள் செல்ல போட்ட திட்டங்கள் நிறைவேறும். இன்று வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கையாக செல்லுங்கள். மனதில் ஏதாவது கலக்கம் ஏற்படும். காரணமே இல்லாமல் வீண் பழி சுமக்க நேரிடும். ஒதுங்கிச் சென்றாலும் வழியே வந்து சிலர் சண்டை போட கூடும். அந்த விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருங்கள். கண் சம்பந்தமான கோளாறுகள் ஏற்படக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். வேளை தவறி உணவு உண்ணும் படியான சூழ்நிலை இருக்கும். அந்த விஷயத்தில் கவனம் கொள்ளுங்கள். புதிய பதவி அல்லது பொறுப்புகள் உங்களைத் தேடி வரக்கூடும்.
இன்று நல்ல வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேறுவார்கள் கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். இன்று நீங்கள் சக மாணவர்களிடம் பழகும் போது கொஞ்சம் கவனமாக பழகுங்கள். பேசும்போது நிதானத்தைக் கடைபிடியுங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது முக்கியமான காரியத்திற்கு செல்லும் போதோ அல்லது ஆரஞ்சு நிறத்தில் கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும். அதுபோலவே நீங்கள் காலையில் எழுந்ததும் காக்கைக்கு உணவை வைத்துவிட்டு வெளியே செல்லுங்கள் .நீங்கள் செய்யக்கூடிய காரியங்கள் சிறப்பை கொடுக்கும். தயவுசெய்து இதை மட்டும் செய்து பாருங்கள்.’
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
அதிஷ்ட எண் : 2 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்
மகரம் :
மற்றவரின் நலமே தன்னுடைய நலம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும் மகர ராசி அன்பர்களே..!! இன்று யோகமான நாளாக இருக்கும். யோசிக்காமல் செய்த காரியங்கள் கூட வெற்றி கிடைக்கும். வரவு திருப்திகரமாக இருக்கும். அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்ளும் எண்ணம் உருவாகும். அதிகாரிகளால் நன்மை ஏற்படும். இன்று தொழில் வியாபாரத்தில் திடீர் போட்டிகள் இருக்கும். வீண் வார்த்தைகளை பேசுவது மட்டும் தவிர்த்துக்கொள்ளுங்கள். வாடிக்கையாளர்கள் மனநிறைவிற்கு கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் பணியாற்றுவதால் உடல் சோர்வடைய கூடும். வேலை செய்யும் இடத்திலும் மேலதிகாரிகளிடம் வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. எதிர்பார்த்த பணி உயர்வு கிட்டும். இன்று அனைவரின் ஆதரவும் கிடைக்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சியும் கலகலப்பும் ஏற்படும். உங்களுடைய மனம் இன்று கொஞ்சம் அலை பாயக்கூடும். அந்த விஷயத்தில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள். மாணவர்கள் கல்வியில் சிறப்பான இடத்தை பெறக்கூடும். விளையாட்டில் இன்று ஆர்வம் செல்லும். இன்று சக மாணவருடன் பேசும் பொழுது கவனம் இருக்கட்டும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுது நீல நிற ஆடையை அல்லது நீல நிறத்தில் கைக்குட்டை எடுத்துச் செல்லுங்கள் அனைத்தும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே நீங்கள் காலையில் எழுந்ததும் காக்கைக்கு உணவை வைத்துவிட்டு இன்று காரியங்களை மேற்கொள்ளுவது சிறப்பை கொடுக்கும். தயவுசெய்து இதை மட்டும் செய்து பாருங்கள். இன்று நாள் எப்படி இருந்தது என்று உங்களுக்கே தெரியும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 3
அதிர்ஷ்டநிறம் : பச்சை மற்றும் நீல நிறம்
கும்பம் :
குடும்பத்திற்காக அயராது உழைக்க கூடிய கும்பராசி அன்பர்களே..!! இன்று நீங்கள் பாராட்டு மழையில் நனைய கூடும். பண வரவு சிறப்பாக இருக்கும். தொழில் ரீதியாக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். குடும்பத்தில் மங்கல ஓசை கேட்பதற்கான அறிகுறிகள் தோன்றும். அரசு வழியில் அனுகூலம் உண்டாகும். இன்று குடும்பத்தில் ஏதாவது வேண்டாத பிரச்சினை மட்டும் தலை தூக்கலாம் பார்த்துக்கொள்ளுங்கள். உறவினர்கள் நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். தேவையில்லாத பிரச்சனைகளில் மட்டும் தலையிட வேண்டாம். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். அனுசரித்துச் செல்லுங்கள் எப்பொழுதுமே. தாய்வழி உறவினர்களிடம் சஞ்சலம் ஏற்படக்கூடும். சொத்து சார்ந்த விஷயங்கள் அனுகூலத்தை கொடுக்கும். எதிரிகள் உங்களை விட்டு விலகிச் செல்வார்கள். இன்று வெளியூர் பயணங்களை மேற்கொள்வதாக இருந்தால் மட்டும் கவனமாக மேற்கொள்ளுங்கள்.
பொருட்கள் மீது கவனம் இருக்கட்டும். இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேற அதற்கு கொஞ்சம் கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். பாடத்தில் மட்டும் கவனத்தை செலுத்துங்கள். விளையாட்டில் ஆர்வம் செல்லும். விளையாட்டை ஏறக்கட்டி விட்டு பாடத்தில் கவனத்தை செலுத்துவது மிகவும் நல்லது. இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுது மஞ்சள் நிற ஆடையோ அல்லது மஞ்சள் நிறத்தில் கைக்குட்டையோ எடுத்துச் செல்லுங்கள் அனைத்தும் சிறப்பாகவே இருக்கும். அதுபோலவே நீங்கள் காலையில் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்கினால் நீங்கள் செய்யக்கூடிய விஷயங்கள் அனைத்தும் வெற்றிகரமாக நடக்கும். தயவுசெய்து இதை மட்டும் செய்து பாருங்கள் எப்படி இருந்தது என்று உங்களுக்கே தெரியும்.
இன்று உங்களுக்கான அதிஷ்ட மான திசை : கிழக்கு
அதிஷ்ட எண் : 1 மற்றும் 7
அதிஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்
மீனம் :
மன உறுதியும் தன்னம்பிக்கையும் தெய்வ பக்தியும் கொண்ட மீன ராசி அன்பர்களே..!! இன்று வளர்ச்சி கூடும் நாளாக இருக்கும். நேற்றைய பணி ஒன்றை இன்று துரிதமாக செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். காணாமல் போன பொருள் ஒன்று கைக்கு வந்து சேரும். உடல் நலம் சீராகி உற்சாகப்படுத்தும். இன்று மனக்கவலை மட்டும் கொஞ்சம் உண்டாகும். வீண் அலைச்சலும், அதனால் சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாமலும் போகலாம். எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது. பணியாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இலக்கியத் துறைகளில் உள்ளவர்களுக்கு புகழ் ஓங்கும். சக கலைஞர்கள் மூலம் சில தொந்தரவுகளில் நீங்கள் ஈடுபடலாம். கலைப் பொருட்களை விற்பனை தொழில் செய்வோருக்கு லாபம் அதிகரிக்கும். இன்று குடும்பத்தில் கலகலப்பான சூழல் இருக்கும். வெளியிடங்களுக்கு செல்லும் போது மட்டும் பொருட்களை கவனமாக எடுத்துச் செல்லுங்கள். உறவினர் வருகை இருக்கும்.
அதனால் செலவுகளும் இருக்கும். இன்று ஆதாயம் பெறுவதற்கு ஓரளவு அலைய வேண்டிய சூழலும் இருக்கும். இன்று நட்பு வட்டம் விரிவடையும். வெளியூரில் இருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும். ஏற்றுமதி துறையில் உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றமான சூழலில் இருக்கும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை அடைய கூடும். ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெற கூடும். இன்று சக மாணவர்களிடம் பழகும் போது கவனமாக பழகுங்கள். பேசும்போதும் நிதானமாகப் பேசுங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போதோ முக்கியமான காரியத்திற்கு செல்லும் போதோ மஞ்சள் நிற ஆடை அல்லது மஞ்சள் நிறத்தில் கைக்குட்டையை எடுத்து சென்றால் அனைத்தும் சிறப்பாக நல்லபடியாக நடக்கும். அதுபோலவே நீங்கள் காலையில் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை மேற்கொள்ளுங்கள். அனைத்து விதமான விஷயங்களும் சிறப்பாக நடக்கும். தயவுசெய்து இதை மட்டும் செய்து பாருங்கள் எப்படி இருந்தது என்று நீங்களே சொல்வீர்கள்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்