Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

25 ஆண்டுகளுக்கு பின்…. நடைபெற்ற நிகழ்ச்சி…. ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு….!!

25 ஆண்டுகளுக்கு பின் பழைய மாணவர்களுக்கான சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது .

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வானரமுட்டி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி பள்ளியில் 1996-98 பயின்ற மாணவர்கள் 25 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் முதல்வரான கிரேனா ராஜாத்தி தலைமை தாங்கினார். இதனையடுத்து பள்ளியின் முன்னாள் பேராசிரியர்கள் முனியசாமி, கனகசபை, கலைச்செல்வி, நல்லாசிரியர் விருது பெற்ற சுரேஷ்குமார், ஆசிரியர்கள் ஜோசப், ஜெபராஜ், காந்தராஜ்,ரமேஷ், ஜான் பாரதிராஜா மற்றும் பெரும்பாலானோர் கலந்து கொண்டு பேசினர். அதன்பின் முன்னாள் மாணவர்கள் சார்பாக ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

Categories

Tech |