ரூ 25 கோடி , 30 கோடி , 50 கோடி பணம் எங்கிருந்து வந்தது என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று கர்நாடக சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் குமாரசாமி கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது. இதில் குமாரசாமி அரசு தோல்வி அடைந்து ஆட்சியை இழந்தது. குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகளும் , எதிராக 105 வாக்குகளும் பதிவாகின. இதனால் 6 வாக்குகள் வித்தியாசத்தில் குமாரசாமி அரசு கவிழ்த்தது.
நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாக காங்கிரஸ் கட்சி தலைவர் சித்தராமையா பேசுகையில், ரூ. 25 கோடி, 30 கோடி, 50 கோடி என இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது. அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள். அவர்களின் அரசியல் முடிவுக்கு வரும். பெரும் வர்த்தகம் தான் பிரச்சனையாகியுள்ளது. அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் வர்த்தகத்திற்கு சிக்கியுள்ளனர் என்று குற்றம் சாட்டினார்.