அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலடுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்திய வருகையில் 25 ஐபிஎஸ் அதிகாரிகள், 65 துணை ஆணையர் நிலை காவல்துறை அதிகாரிகள், 200 ஆய்வாளர்கள், 800 துணை ஆய்வாளர்கள், 10,000 காவல்துறை அலுவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் அதிபர் ட்ரம்ப் பயணத்தை கண்காணிக்க ஐந்து பாதுகாப்புக்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தகுழு விமான நிலையம், சாலை பயணம், காந்தி ஆசிரமம், மொடீரா அரங்க நிகழ்ச்சி, ஆக்ரா பயணம், டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரக சந்திப்பு என அனைத்தையும் கண்காணிக்கின்றார்கள். இவர்களோடு துப்பாக்கி ஏந்திய இந்தியாவின் தேசிய பாதுகாப்புக் குழு சிறப்புப் பிரிவு அலுவலர்களும் இணைந்துள்ளனர்.
மேலும் அதிபர் ட்ரம்ப் இரண்டு நாட்கள் இந்தியாவில் சுற்றிப்பார்க்க இருப்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்க அமெரிக்க சீக்ரட் சர்வீஸ் எனப்படும் ரகசிய சேவை பிரிவினரும் களமிறக்கப்பட்டுள்ளனர்.இவர்கள் தான் அதிபர் ட்ரம்பின் முதல் பாதுகாப்பு வளையமாக இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.