சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரில் பத்து வயது சிறுவனை கடத்தி கொலை செய்த மூன்று நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கர்நாடக மாநிலம், ஷிகரிபல்யாவைச் சேர்ந்த வாசி முகமது அப்பாஸின் மகன் ஆசிப் ஆலம். இவருக்கு தற்போது பத்து வயது ஆகிறது. இந்த சிறுவனை அடையாளம் தெரியாத சில நபர்கள் கடத்தி சென்றுள்ளனர். பின்னர் சிறுவனின் தந்தையிடம் 25 லட்சம் பணம் கேட்டு கடத்தல்காரர்கள் மிரட்டியுள்ளனர். இது குறித்து காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். புகாரின் பெயரில் காவல்துறையினர் கடத்தல்காரர்களை தீவிரமாக தேடியுள்ளனர். அவர்கள் தேடுவதை அறிந்த கடத்தல்காரர்கள் அந்த சிறுவனின் தலையில் கல்லை போட்டு நசுக்கி கொலை செய்துவிட்டு தப்பி ஓடி உள்ளனர்.
இதையடுத்து பெங்களூரு காவல்துறையினர் அவர்களிடமிருந்து வந்த தொலைபேசி எண்ணை வைத்து அவர்கள் இருக்கும் இடத்தை கண்டறிந்துள்ளனர். பிறகு சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் காவல்துறைக்கு தகவலை அனுப்பி குற்றம்சாட்டப்பட்ட முஹம்மது ரிஸ்வான், முகமது சிராஜ், முகமது நவ்ஷாத் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பெங்களூரு காவல் துறையிடம் ஒப்படைத்துள்ளனர். பணம் கொடுக்காத காரணத்தினால் பத்து வயது சிறுவனை கொடூரமாக கொலை செய்த கடத்தல்காரர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று பலரும் தெரிவித்துள்ளனர்.