Categories
உலக செய்திகள்

உக்ரைன் நாட்டிலிருந்து 25 லட்சம் மக்கள் வெளியேற்றம்… ஐ.நா அகதிகள் ஆணையம் தகவல்…!!!

ரஷ்ய படைகள் தாக்குதல் மேற்கொண்ட பிறகு உக்ரைன் நாட்டிலிருந்து தற்போது வரை 25 லட்சம் மக்கள் அகதிகளாக வெளியேறியிருக்கிறார்கள்.

ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்து அந்நாட்டையே நிலைகுலையச் செய்திருக்கிறது. எனவே, உக்ரைன் மக்கள் தங்களை காத்துக்கொள்ள நாட்டிலிருந்து வெளியேறி பக்கத்து நாடுகளில் தஞ்சமடைந்து வருகிறார்கள்.

இந்நிலையில், ரஷ்யா, உக்ரைன் நாட்டை கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி அன்று ஆக்கிரமித்த பின், அந்நாட்டிலிருந்து தற்போது வரை 25 லட்சம் மக்கள் அகதிகளாக வெளியேறியிருக்கிறார்கள். ஐக்கிய நாடுகள் அகதிகள் ஆணையமானது, உக்ரைன் நாட்டிலிருந்து 40 இலட்சம் பேர் அகதிகளாக வெளிவர வாய்ப்பிருப்பதாக கூறியிருக்கிறது.

Categories

Tech |