Categories
தேசிய செய்திகள்

25 ஆயிரம் உடல்களை அடக்கம் செய்தவர்…. இப்ப மருந்து வாங்க கூட காசு இல்ல… இவரின் கடைசி ஆசை இதுதான்..!!

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆதரவற்றவர்களின் உடல்களைச் சொந்தச் செலவில் அடக்கம் செய்த சேவைக்காக விருது அறிவிக்கப்பட்டு இருந்த முதியவர் தற்போது நோய்வாய்பட்டு மருத்துவ செலவுக்கு பணம் இல்லாமல் தவித்து வருகிறார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு தேசிய விருது அறிவிக்கப்பட்ட நிலையில் இதுவரை அந்த விருதை அவருக்கு வழங்கவில்லை. சாவின் பிடியில் இருக்கும் அந்த விருதைத் தனது மார்பில் சுமக்கும் தருணத்தை உணராமல் உயிரிழந்துவிடுவாரோ எனக் குடும்பத்தினர் கவலைப்படுகின்றனர். அயோத்தியில் உள்ள மொஹல்லா கிரி அலி பெக் பகுதியை சேர்ந்த சைக்கிள் மெக்கானிக் ஆனா முதியவர் கடந்த 6 ஆண்டுகளாக பகுதியிலுள்ள ஆதரவற்றவர்கள் உயிரிழந்தால்  அவர்களை தனது சொந்த செலவில் அடக்கம் செய்திருந்தார்.

இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட உடல்களை தனது சொந்த செலவில் அடக்கம் செய்துள்ளார். இவரின் தன்னலமில்லா சேவையை பார்த்த மத்திய அரசு கடந்த ஆண்டு விருது வழங்கி கவுரவித்தது. ஆனால் மத்திய அரசு அறிவித்த விருது இதுவரை முகமது செழிப்புக்கு வழங்கப்படவில்லை. முகமது ஷெரீப் முதுமையால் தற்போது நோய்வாய்ப்பட்டு வறுமையில் சிக்கித் தவிக்கிறார். அவருக்கு சிகிச்சை கூட பணம் இல்லாமல் தவித்து வருகிறார். இது குறித்து அவரின் மகன் முகம்மது கூறுகையில் கடந்த ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்து கடிதம் வந்தது .

அதில் எனது தந்தையின் சேவையை பாராட்டி விருது வழங்கப்படுகிறது என தெரிவித்தது. உங்களுக்கு அழைப்பு வரும் போது டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வந்து விருதை பெற்றுக் கொள்ளும்படி கூறப்பட்டது. இதற்காக என் தந்தை 2500 கடன் பெற்று டெல்லி செல்ல டிக்கெட் முன்பதிவு செய்தார். ஆனால் கடைசி நேரத்தில் கொரோனா வைரஸ் காரணமாக இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது .

ரயில் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டது. ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியவில்லை. என் தந்தை விருதைப் பெறாமலேயே சென்றுவிடுவாரோ எனக் கவலையாக இருக்கிறது ” எனத் தெரிவித்தார்.

Categories

Tech |