Categories
தேசிய செய்திகள்

25 வயது மேற்பட்டோருக்கு…தடுப்பூசி செலுத்த அனுமதி கேட்டு …மராட்டிய முதல்வர் பிரதமருக்கு கடிதம் …!!!

மகாராஷ்டிராவில் தற்போது அதிகரித்துள்ள கொரோனா  தொற்று காரணமாக, 25 வயது மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்துமாறு, அம்மாநில முதல்வர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக அம்மாநிலத்தில் ஊரடங்கு விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸின்  தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் ,தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது 45 வயது மேற்பட்டவர்களுக்கு , தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகின்றது. தொற்று அதிகரித்து வரும் நிலையில் ,பொதுமக்களும் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக் கொண்டு வருகின்றன. இந்நிலையில் பிரதமர் மோடிக்கு ,மகாராஷ்டிரா மாநிலத்தின் முதலமைச்சரான உத்தவ் தாக்கரே  கடிதம் ஒன்றை எழுதினார் .

அதில் மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது கொரோனா தொற்றின்  எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதால், மகாராஷ்டிரா மாநிலத்திற்கு கூடுதலாக 1.5 கோடி டோஸ்  தடுப்பூசிகளை  வழங்க வேண்டும் .அம்மாநிலத்தில்  மும்பை, தானே ,புனே , அவுரங்காபாத் ,நாசிக் மற்றும்  நாக்பூர் ஆகிய 6 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் தொற்றால்  அதிகம் பாதிப்படைந்துள்ளனர். குறிப்பாக இந்தத் தொற்றானது இளம் வயதினரை அதிகமாக பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே 25 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்த அனுமதியளிக்க வேண்டும் ,என்று  பிரதமர் மோடிக்கு அம்மாநில முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.

Categories

Tech |