17 வயது வித்தியாசம் கொண்ட தம்பதிகள் வேறு வேறு அறையில் தூக்கிப்போட்டு இறந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் சூரத் கிராமத்தில் வசிப்பவர் பால்தேவ்(42) . இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இவருக்கும் ஹேமா(25) என்ற பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இருவருக்கும் 17 வயது வித்தியாசம் என்பதால், இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் இருவரும் திருமணம் செய்து கொள்வதில் பிடிவாதமாக இருந்ததால் இரு குடும்பத்தினரும் சேர்ந்து திருமணம் செய்து வைத்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் வயது வித்தியாசம் அதிகமாக இருந்ததால் அவர்களின் திருமணம் ஊர் முழுவதும் ஒரு விவாதப் பொருளாக பேசப்பட்டு வந்துள்ளது.
மேலும் இத்தம்பதியருக்கு குழந்தை இல்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று இந்த தம்பதிகள் இருவரும் வீட்டில் தனி தனி அறையில் தூக்கு போட்டு இறந்து கிடந்தனர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இருவரது சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.
இதுகுறித்து ஊர் மக்கள் கூறுகையில், “இவர்கள் இருவரும் நல்ல முறையில் தான் குடும்பம் நடத்தி வந்தனர். இவர்கள் இருவருக்கும் எந்த சண்டையும் வந்ததே கிடையாது. இந்நிலையில் இருவரும் வேறுவேறு அறையில் தூக்கில் தொங்கியது சந்தேகமாக இருக்கிறது” என்று கூறியுள்ளனர். இதைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் இது தற்கொலையா? அல்லது கொலையா? என்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.