Categories
பல்சுவை

“250 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆலமரம்” 3618 விழுதுகள்…. ஒரு சுவாரஸ்யமான தகவல்…!!

இந்தியாவின் தேசிய மரம் ஆலமரம் ஆகும். உலகிலேயே மிகப்பெரிய ஆலமரம் என்ற கின்னஸ் சாதனையை இந்தியாவில் இருக்கும் ஆலமரம் பிடித்துள்ளது. அதாவது உலகிலேயே மிகப்பெரிய ஆலமரம் கொல்கத்தாவில் உள்ள அவுரா பகுதியில் அமைந்துள்ளது. இந்த ஆலமரம் 250 ஆண்டுகள் பழமை வாய்ந்தது ஆகும். இந்த ஆலமரம் 14,500 சதுர மீட்டரில் பரந்து விரிந்துள்ளது. இந்த ஆலமரம் இன்றளவும் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த ஆலமரத்தை கிபி 1786-ம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த கர்னல் அலெக்ஸாண்டர் கிட் என்பவரால் நடப்பட்டது. இந்த மரத்தை தூரத்திலிருந்து பார்க்கும்போது ஒரு சிறிய காடு போன்று தோற்றமளிக்கும்.

இந்த ஆலமரம் The great banyan என அழைக்கப்படுகிறது. இந்த ஆலமரத்தை பார்ப்பதற்கு உலகின் பல நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்காவிற்கு வருகின்றனர். இந்தத் தாவரவியல் பூங்காவில் பல நாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட 12,000 வகைகளுக்கு மேல் உள்ள செடிகள் மற்றும் மரங்கள் உள்ளது. இந்த மரத்தின் விழுதுகள் பல இடங்களில் வேறூன்றி நின்றாலும், முதன் முதலாக இந்த மரத்தில் தோன்றிய தண்டுப்பகுதி இல்லை. இந்த மரம் நடுப்பகுதி இல்லாமல் தன்னுடைய விழுதுகளால் தான் நிற்கிறது. இந்த மரத்தின் தண்டுப்பகுதி புயல் தாக்கத்தினால் பூஞ்சை பிடிக்க ஆரம்பித்துள்ளது. இதன் காரணமாகத்தான் தண்டுப்பகுதியை அகற்றியுள்ளனர். இந்த மரத்தில் தற்போது 3,618 விழுதுகள் இருக்கிறது.

Categories

Tech |