கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோட்டார் பகுதியில் இருக்கும் கடையில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதாக மாநகராட்சி நிர்வாகத்தினருக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர். அந்த தகவலின் படி அதிகாரிகள் ராஜ்குமார், பகவதி பெருமாள் ஆகியோர் சம்பந்தப்பட்ட கடைக்கு சென்று ஆய்வு நடத்தியதில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியது உறுதியானது. இதனால் கடை உரிமையாளருக்கு அதிகாரிகள் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
இதே போல் ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்கு அதிகாரிகள் 1 லட்ச ரூபாய் அபராதம் விதித்தனர். மொத்தமாக 250 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.