சொந்தக்காரர்கள் நிராகரித்த 25,000க்கு மேற்பட்ட உடல்களை தகனம் செய்துள்ள முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த முகமது ஷரிப்க்கு ராமர் கோவில் பூமி பூஜைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நாளை நடைபெறுகிறது. இதில் பங்கேற்க 175 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுத்து அனுமதிக்கப்பட உள்ளது. இந்த விழாவை சிறப்பிக்க பிரதமர் மோடி வருவதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பிரதமர் மோடி, உத்தர பிரதேச மாநில முதல்வர், கவர்னர், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இந்த பூமி பூஜையில் பங்கேற்கின்றனர்.
இந்த நிலையில் முகமது ஷரீப் என்பவர், சொந்தக்காரர்கள் உரிமைக்கோர முன்வராத சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் உடல்களை தகனம் செய்துள்ளார். இத்தகைய மனப்பான்மையை மதித்து இவருக்கும் ராமர் கோவில் பூமி பூஜை விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது கறித்து முகமது ஷரீப் கூறுகையில், “என் உடல்நிலை அனுமதித்தால், விழாவில் கலந்து கொள்வேன்’’ என்று தெரிவித்துள்ளார்.