Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வீடுபுகுந்து கத்தியை காட்டி மிரட்டி 25 சவரன் நகை கொள்ளை…!!

கவுந்தப்பாடி அருகே வீடு புகுந்த மர்மநபர்கள்  பெண்களிடம் கத்தியை காட்டி மிரட்டி 25 சவரன் நகைகளை கொள்ளையடித்துசென்றுள்ளனர்.

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியை சேர்ந்த துரைராஜ்  இரவு வெளியே சென்றிருந்தபோது அவர் வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் நான்கு பேர்  துரைராஜின் மனைவி சாந்தி, மகள் கிருத்திகா உள்பட நான்கு பெண்களின் கழுத்தில் கத்தியை வைத்து அணைத்து நகைகளையும் கழட்டுமாறு கேட்டுள்ளனர் அவர்களுள் ஒருபெண் சத்தமிட்டபோது ஒரு கொள்ளையன் கத்தியால் தன் கையை அறுத்து இதேபோல் உங்கள் கழுத்தையும் அறுப்போம் என மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதன்பிறகு அவர்கள் கழுத்தில் அணிந்திருந்த பத்து சவரன்  நகை மற்றும் பீரோவில் வைத்திருந்த 15 சவரன் நகை என 25 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். கொள்ளையர்கள் முகமூடி அணிதிருந்தது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் அடுத்தமாதம் கிருத்திகா திருமணம் நடைபெற உள்ள நிலையில் நகை இருப்பதை அறிந்து மர்ம நபர்கள் இந்த கொள்ளையில் ஈடுபட்டனரா என்று பலகோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |