புதுச்சேரி அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இனி நான் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று அறிவித்துள்ளார் .
புதுச்சேரி பிராந்திய பகுதியான ஏனாமில் மல்லாடி கிருஷ்ணாராவ் 25 ஆண்டுகளாக எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். அதற்காக அவரை பாராட்டுவதற்காக நேற்று ஏனாமில் வெள்ளி விழா நடைபெற்றது. இந்த விழாவானது மாலை 6 மணிக்குத் தொடங்கி நள்ளிரவு 11.40 மணிளவில் முடிந்தது.
விழாவில் பங்கேற்ற மல்லாடி கிருஷ்ணாராவின் வாழ்க்கை வரலாற்றை குறிக்கும் வீடியோ படம் வெளியிடப்பட்டது. அதில் அவரது வாழ்க்கை வரலாறு, அரசியல் பிரவேசம் மற்றும் மக்களுக்காக அவர் செய்த நன்மைகள் போன்ற சாதனைகளை அக்காட்சிகள் மூலம் விளக்கினார்.அதன்பின் அவர் பேசும் வீடியோவும் வெளியிடப்பட்டது. அதில் அவர் பேசியதாவது, நான் புதுச்சேரி மற்றும் ஏனாம் தொகுதி மக்களுக்காக பல்வேறு நன்மைகளை செய்துள்ளேன். எனவே, இனி நானும் எனது குடும்ப உறுப்பினர்கள் யாரும் தேர்தலில் போட்டியிட மாட்டோம் என்று கூறினார்.