Categories
சேலம் மாநில செய்திகள்

26 ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்…. இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலை வாய்ப்பு முகாம்கள் இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது. வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் விதமாக அனைத்து மாவட்டங்களிலும் வேலை வாய்ப்பு முகாம்களை நடத்த அரசு அறிவுறுத்தியுள்ளது.

அவ்வகையில் சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் வருகின்ற ஆகஸ்ட் 26ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை நடைபெற உள்ள வேலை வாய்ப்பு முகாமில் எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு உள்ளிட்ட கல்வி தகுதி உள்ளவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். இந்த முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் விவரங்களுக்கு 0427-2401750 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.

Categories

Tech |