Categories
மாநில செய்திகள்

26 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்….. தமிழக அரசு அதிரடி…!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதன் பிறகு ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையடுத்து அரசுத் துறையில் பல்வேறு மாற்றங்களை தமிழக அரசு தொடர்ந்து செய்து வருகிறது. தற்போது வரையிலும் 100 க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்துள்ளது.

இந்நிலையில் மேலும் 26 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். அதன்படி,  திருப்பூர் மாநகராட்சி ஆணையராக கிரண்குமார், கோவை மாநகராட்சி ஆணையராக ராஜகோபால் சங்கரா, மதுரை மாநகராட்சி ஆணையராக கார்த்திகேயன், சேலம் மாநகராட்சி ஆணையராக கிறிஸ்துராஜ், திருப்பூர் மாநகராட்சி ஆணையராக கிரந்திகுமார் பட்டி, நெல்லை மாநகராட்சி ஆணையராக விஷ்ணு சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Categories

Tech |