தமிழகத்தில் கூட்டுறவு சங்கத்தின் 26 துணை பதிவாளர்கள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அனைத்து துறைகளிலும் பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் கூட்டுறவு சங்கங்களில் 26 துணைப்பதிவாளர் கள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. புதிய பணியிடத்தில் உடனடியாக பணியில் சேர வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விடுப்பு ஏற்றுக் கொள்ளப்படாது எனவும் தெரிவித்துள்ளது.
Categories