பிரிட்டனில் சுமார் 26 நாய்களை திருடி அடைத்துவைத்திருந்த இளம்பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரிட்டனில் உள்ள எப்சோம் என்ற நகரில் காவல்துறையினர் சோதனைக்கு சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த நாய் கொட்டகையில் சுமார் 26 நாய்கள் இருந்ததை கண்டறிந்துள்ளனர். அதோடு 5 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் 20 முதல் 30 வயதுடைய மூன்று இளம்பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் அந்த நாய்களுக்கு தற்போது மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாய்களின் உரிமையாளர்களை கண்டுபிடிப்பது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.