உலகத்தில் பொதுவாக எந்த ஒரு வழக்கை எடுத்துக் கொண்டாலும் அந்த வழக்குக்கான தீர்ப்பு வருவதற்கு பல மாதங்கள் மற்றும் வருடங்கள் ஆகும். ஆனால் உலகத்தில் மிகவும் சீக்கிரமாக தீர்ப்பு வழங்கப்பட்ட ஒரு வழக்கு இருக்கிறது என்று சொன்னால் நம்ப முடியுமா? ஆம். அந்த வழக்குக்கான குற்றம் விசாரிக்கப்பட்டு 26 நொடிகளில் அதற்கான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை கடந்த 2013-ம் ஆண்டு நடந்துள்ளது. அதாவது ஒரு பெண் தன்னுடைய ஹேண்ட் பேக்கை திருடி விட்டார்கள் என 2 பேர் மீது குற்றம் சுமத்தியுள்ளார். ஆனால் அவர்கள் 2 பேரும் நாங்கள் ஹேண்ட் பேக்கை திருடவில்லை எனவும் அந்தப் பெண் பொய் சொல்கிறார் எனவும் கூறியுள்ளனர்.
அதன் பிறகு நீதிபதி அந்தப் பெண்ணிடம் ஹேண்ட் பேக்கில் என்ன இருந்தது என கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண் 50 டாலர் பணம், கிரெடிட் கார்டுகள், மேக்கப் செட், ஹெட்செட் உள்ளிட்ட பொருட்கள் இருந்துள்ளது என கூறியுள்ளார். உடனே குற்றவாளிகள் 2 பேரும் அந்தப் பெண் பொய் சொல்கிறார் எனவும், அந்த ஹேண்ட் பேக்கில் ஹெட்செட் இல்லை எனவும் கூறியுள்ளனர். இதைக் கேட்டு நீதிமன்றத்தில் இருந்த அனைவரும் சிரித்துள்ளனர். மேலும் குற்றம் சுமத்தப்பட்ட 2 பேருக்கும் நீதிபதி அபராதம் மற்றும் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.