Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் பலத்த மழை… 26 பேர் உயிரிழப்பு… வெளியான பரபரப்பு தகவல்..!!

இலங்கையில் தொடர்ந்து பெய்து வந்த கனமழையால் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் நவம்பர், அக்டோபர் உள்ளிட்ட மாதங்களில் ஆண்டுதோறும் வழக்கமாக வடகிழக்கு பருவ மழை பெய்யும். ஆனால் இந்த வருடம் இலங்கையில் வழக்கத்திற்கு மாறாக கடந்த சில நாட்களாக கன மழை தொடர்ச்சியாக பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்ததோடு, சுமார் 2 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இதுவரை வெள்ளம் மற்றும் கனமழை தொடர்பில் இலங்கையில் 26 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 6 பேர் மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதற்கிடையே இலங்கை அரசு வெள்ளநீரானது மழை குறைவு காரணமாக படிந்து வருவதால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளும் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாக தகவல் தெரிவித்துள்ளது.

Categories

Tech |