விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் மட்டும் 2600 சிலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் நாளை ( திங்கள்கிழமை ) விநாயகர் சதுர்த்தி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட இருக்கின்றது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து அமைப்புகள், கோவில் நிர்வாகம், தனி தனி குழுக்கள் என சார்பில் பொது இடங்களில் விதவிதமான வகைகளில் விநாயகர் சிலையை வைத்து பூஜை செய்வார்கள்.கடந்த வாரம் முதல் தமிழக அரசு சார்பில் இப்படி விநாயகர் சிலையை வைப்பதற்கு காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறை, மாநகராட்சி, நகராட்சி அமைப்புகள், மின்சாரத்துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகிய துறைகளிடம் இருந்து தனித்தனியாக அனுமதி பெற வேண்டும் என்ற நடைமுறை அமலில் உள்ளது.
சென்னையில் விநாயகர் சதுர்த்தி சிலை வைப்பதற்கான அனுமதியை எளிதாக்க போலீசார் ‘ஒற்றை சாளர’ நடைமுறையை அறிமுகம் செய்தனர். இதனால் விநாயகர் சிலைகளுக்கு அனுமதி வழங்குவதற்கென்று தனி இன்ஸ்பெக்டர்கள் நியமனம் செய்யப்பட்டு, விநாயகர் சிலை அனுமதியை தனித்தனியே செய்யாமல் இன்ஸ்பெக்டர்களிடம் அனுமதி கேட்டு சிலையை நிறுவிக்கொள்ளலாம். இதில் சென்னை உயர்நீதிமன்றம் வழிகாடல் , தமிழக அரசு வகுத்துள்ள விதிமுறையின் படி சென்னை முழுவதும் 2, 600 விநாயகர் சிலைகள் மட்டும் நிறுவி வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு விநாயகர் சிலைகளுக்கும் ‘ஷிப்டு’ முறையில் காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.