Categories
அரசியல் மாநில செய்திகள்

266நாட்கள் ஆகிட்டு…! என்ன செய்தார் ”இவர்”… சட்டமன்றத்தில் பேசுவேன்… உறுதியாக சொன்ன ஹரி நாடார் ..!!

பனகாட்டுப்படை கட்சியின் ஆலங்குளம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஹரி நாடார் செய்தியாளர்களிடம் பேசும் போது, சாத்தான்குளம் தந்தை – மகன் கொடூர கொலை வழக்கில் அவர்கள் படுகொலை செய்யப்பட்டு 266ஆவது நாள் ஆகுது. 266நாள் ஆகியும், திமுகவோட சட்டமன்ற உறுப்பினர் மரியாதைக்குரிய சகோதரி பூங்கோதை ஆலடி அருணா அவர்கள் என்ன நடவடிக்கை எடுத்து இருக்காங்க ? ஒரு சட்டமன்ற உறுப்பினராக நாடார்கள் ஓட்டு  வேணும்,

நாடார் சமுதாயத்தை சார்ந்த அப்பாவி தந்தையும் – மகனும் காவல் துறையினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளர்கள். ஒரு சட்டமன்ற உறுப்பினராக இருந்து என்ன செய்தார்கள் ? அவங்களே சொல்லலாம்….  என்னுடைய  பதவியை கூட நான் ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன். இந்த படுகொலைக்கு நீதி கிடைக்கனும்னு சொல்லி இருக்கலாம், அதை செய்யவில்லை.

திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் செய்யவில்லை எனும் போது  அதிமுகவில் சட்டமன்ற உறுப்பினர்கள்  நாடார்கள் எத்தனையோ பேர் இருக்காங்க. ஆனால் அதிமுக எம்.எல்.ஏக்களும்  அதை செய்ய தவறும் பட்சத்தில், நாடார்களின் பிரச்சனைகளுக்கு சட்டமன்றத்தில் குரல் கொடுப்போம்.ஆலங்குளம் தொகுதியில் வெற்றி வேட்பாளராக நான் ஆன பிறகு சட்டமன்றத்தில் என்னோட முதல் குரலே  சாத்தான்குளம் கொடிய சம்பவத்திற்கு நீதி வேணும் என்பது தான் என ஹரி நாடார் தெரிவித்தார்.

Categories

Tech |