Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“நடத்தை சரியில்லை” நிறுத்தப்பட்ட திருமணம்…இளம்பெண்ணிற்க்கு நடந்த கொடுமை…சென்னையில் பரபரப்பு…!!ண்

திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணின் ஆபாச படங்களை வெளியிட்ட வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை மாவட்டத்தில் உள்ள ஓட்டேரி பகுதியில் வசித்து வரும் முகமது ஆசான் என்பவருக்கும், இளம்பெண் ஒருவருக்கும் கடந்த 13-ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த பெண்ணின் பெற்றோர் முகமது ஆசானின் நடத்தை சரியில்லாததை கண்டறிந்து திருமணத்தை நிறுத்தியுள்ளனர். மேலும் அந்த பெண்ணிற்கும் வேறு ஒருவருக்கும் திருமணம் நிச்சயித்து அடுத்த மாதம் திருமணம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் திருமணத்தை  நிறுத்தியதால் கோபத்தில் இருந்த  முகமது ஆசான் அந்தப் பெண்ணுடன் வீடியோ கால் பேசும் போது எடுத்த ஆபாச படங்களை தனது நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண்ணின் பெற்றோர் புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முகமது ஆசான் குறித்து புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில்  போலீசார் முகமது ஆசான் மீது   வழக்குப்பதிந்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |