மாநாடு படத்திற்காக 27 கிலோ உடல் எடையை குறைத்தது குறித்து சிம்பு பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு நடிப்பில் தற்போது மாநாடு திரைப்படம் உருவாகியுள்ளது. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படம் வருகிற நவம்பர் 25-ஆம் தேதி ரிலீசாக உள்ளது.
இந்த படத்திற்காக நடிகர் சிம்பு 27 கிலோ உடல் எடையை குறைத்து கம்ப்ளீட் ட்ரான்ஸ்பர்மேஷன் லுக்கில் நடித்துள்ளார். இந்நிலையில் 27 கிலோ உடல் எடையை குறைத்தது எப்படி என்பது குறித்து சிம்பு பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அதில் 2 மாதங்கள் முழுவதும் நீராகாரம் மட்டுமே உணவாக எடுத்துக் கொண்டதாகவும், சாலிட் உணவு வகைகளை உட்கொள்ளவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் பல சிரமங்களை தாண்டி வந்ததால் தான் இந்த இடத்தில் இப்படி ஒரு தோற்றத்தில் தான் இருப்பதாக தெரிவித்துள்ளார்.