ராணிப்பேட்டையில் நேரடியாக நெற்பயிர்களை கொள்முதல் செய்யும் நிலையத்தின் முன்பாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டையில் தச்சம்பட்டறை கிராமம் அமைந்துள்ளது. இதனை சுற்றியுள்ள ஆயர்பாடி, சிறுவளையம் உட்பட பலவிதமான பகுதிகளில் வசிக்கும் விவசாயிகள் தச்சம்பட்டறையில் அமைந்திருக்கும் அரசு நெற்பயிர்களை நேரடியாக கொள்முதல் செய்யும் நிலையத்தில் தாங்கள் விளைவிக்கும் நெற்பயிர்களை விற்பனை செய்கின்றனர். அதேசமயம் அந்த நிலையத்தில் 13,515 நெல் மூட்டைகளை இருப்பில் வைத்திருக்கும் சமயத்தில் விவசாயிகள் சுமார் 1500க்கும் அதிகமான நெல் பயிர் மூட்டைகளை விற்பனைக்கு எடுத்துக்கொள்ள கொண்டு வந்துள்ளனர்.
இந்த நிலையில் கொள்முதல் நிலையத்தை மூடுவதற்கு அரசு அதிகாரிகள் தகவல் தெரிவித்ததாக விவசாயிகளுக்கு செய்தி தெரியவந்தது. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் கொள்முதல் நிலையத்திற்கு எதிரே போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் கூறியதாவது, கடந்த 27 நாட்களாகவே நெல் மூட்டைகள் எடையை போடாமல் வெளியே உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் விவசாயிகளினுடைய வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர்.