இளம்நடிகர் ஒருவர் தீடிரென்று உயிரிழந்துள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவைச் சேர்ந்த இளம் நடிகர் Taraan Kootanhayo (27). இவர் கனடாவில் உள்ள Cold Lake என்ற நகரில் பிறந்துள்ளார். இதனையடுத்து வான்கூவர் என்ற இடத்தில் உள்ள நடிப்பு பள்ளி ஒன்றில் நடிப்பு கற்றுள்ளார். அதன்பின் திரைப்படங்களில் நடிக்கத் துவங்கியுள்ளார். மேலும் ஒரு பிரபல துணி நிறுவனத்தின் மாடலாக நடித்துள்ளார். இந்நிலையில் திடீரென Taraan உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் அவரின் இறப்பிற்கான காரணம் என்ன? என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகவில்லை. இது குறித்து அந்த பிரபல துணிநிறுவனம் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் Taraan உங்களின் ஆத்மா சாந்தி அடையட்டும். மேலும் நாங்கள் அனைவரும் உங்களை மிகவும் மிஸ் செய்வோம் என்று கூறியுள்ளனர். மேலும் கடந்த 2018 ஆம் வருடத்தில் நம்பிக்கைகுரிய புதுமுகம் புதுமுகம் என்ற ஜெஸ்லி தியேட்டர் விருதை Taraan பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.