சுதந்திர தினத்தை முன்னிட்டு காவல்துறையினர் மாவட்டம் முழுவதிலும் நடத்திய சோதனையில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 27 பேரை கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் சுதந்திரதினத்தை முன்னிட்டு அனைத்து மதுபான கடைககளும் மூடபட்டடுள்ளது. இந்நிலையில் பதுக்கி வைத்து செய்யப்படும் மது விற்பனையை தடுக்க காவல்துறையினர் மாவட்டம் முழுவதிலும் தீவிர காண்காணிப்பில் ஈடுபட்டிருந்துள்ளனர்.
இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய சோதனையில் பல்வேறு பகுதிகளில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தவர்களை கைது செய்துள்ளனர். அதன் அடிப்படையில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 27 பேரை கைது செய்த காவல்துறையினர் மொத்தம் 469 மதுபாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.