Categories
கல்வி

அரசு கல்லூரிகளில் பணியாற்றும்….. 27 இணை பேராசிரியர்கள் பணியிட மாற்றம்….. தமிழக அரசின் அதிரடி உத்தரவு….!!!!

தமிழக அரசு பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளாக செயல்பட்டு வந்த 27 கல்லூரிகளை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளாக மாற்றி உத்தரவிட்டுள்ளது. அதன்படி செங்கல்பட்டு, விருதுநகர், திண்டுக்கல், மதுரை, நாமக்கல், தர்மபுரி, சேலம், தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, கடலூர், திருப்பத்தூர், பெரம்பலூர், திருச்சி நாகப்பட்டினம், திருவாரூர், ராமநாதபுரம், கோயம்புத்தூர், ஈரோடு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் செயல்படும் 27 உறுப்பு கல்லூரிகள் தான் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளாக மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த கல்லூரிகளில் முதல்வராக வெவ்வேறு அரசு கல்லூரிகளில் பணியாற்றும் திறமையான மற்றும் அனுபவம் மிக்க இணை பேராசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பின்படி தற்போது 27 கல்லூரிகளுக்கும் முதல்வர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு பணியிட மாற்றம் தொடர்பான ஆணையும் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பணியிட மாற்றம் செய்யப்பட்ட முதல்வர்கள் உடனடியாக அந்தந்த கல்லூரிகளில் பணியில் சேர்வதற்கு அறிவுறுத்தப்பட்டதோடு, கல்லூரி கல்வியினை இயக்குனரை சந்தித்து ஆலோசனை பெற்று உடனடியாக கலை மற்றும் அறிவியல் கல்லூரியாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அரசு புதிதாக அறிவித்த அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணி புரியும் ஆசிரியர்கள், முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லது அனைத்து விதமான பணியாளர்களுக்கும் அரசு கருவூலத்தில் இருந்து ஊதியம் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |