சீன நாட்டில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி 27 நபர்கள் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீன நாட்டில் கியூஸோ மாகாணத்தில் 47 பயணிகளுடன் சென்ற பேருந்து திடீரென்று ஒரு பள்ளத்திற்கு கவிழ்ந்தது. இந்த கொடூர விபத்தில் 27 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 20 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
தற்போது, விபத்து நடந்த பகுதியில் மீட்பு குழுவினர், மீட்பு பணிகளை மேற்கொண்டிருப்பதாக அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். கியூஸோ மாகாணத்தில் இருக்கும் ஒரு மலைப்பகுதியில் இந்த விபத்து நடந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.