Categories
அரசியல் மாநில செய்திகள்

மக்களுக்கு ஆறுதல் செய்தி… கொரோனாவால் பாதிக்கப்பட்ட 27 பேர் டிஸ்சார்ஜ்!

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 27 பேர் குணமடைந்துள்ளனர் என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்திருப்பது மக்களுக்கு ஆறுதல் அளிக்கிறது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தபட்டாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்வதால் மக்கள் அச்சத்தில் ஒருவித அச்சத்திலேயே இருந்து வருகின்றனர். நாள்தோறும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. நேற்று ஒரேநாளில் தமிழகத்தில்  48 பேருக்கு கொரோனா  இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில்,  மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 738 ஆனது.

இந்த நிலையில் இன்று மாலை 6 மணிக்கு சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் மேலும் புதிதாக 96 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 96 பேரில் 84 பேர் டெல்லி சென்று திரும்பியவர்கள். இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 738ல் இருந்து 834 ஆக அதிகரித்துள்ளது என்றார்.

மேலும் தமிழகத்தில் இதுவரை 7,267 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 27 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்றார். இது மக்களுக்கு ஆறுதல் அளிக்கக்கூடிய செய்தியாக இருக்கிறது. நேற்று 21 பேர் குணமடைந்த நிலையில் இன்று 6 பேர் என மொத்தம் இதுவரை 27 பேர் குணமடைந்திருப்பது மக்களுக்கு பயத்தை போக்கும் விதமாக இருக்கிறது.

Categories

Tech |