26 ஆண்டுகள் பழைய கருவில் இருந்து ஒரு குழந்தை பிறந்து உலக சாதனை படைத்துள்ளது.
அமெரிக்காவில் டென்னிசி மாகாணத்தில் 27 ஆண்டுகள் கருவிலிருந்து குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தைக்கு மாலி கிப்சன் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. 1992-ஆம் ஆண்டு குழந்தையின் கரு உறைய வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டது. டீனா மற்றும் பென் கிப்சன் தம்பதியர் இந்த கருவை தத்தெடுத்து, பிறகு கடந்த பிப்ரவரி மாதம் உறைந்த நிலையில் இருந்து வெளியேற்றப்பட்டு, அக்டோபர் மாதம் குழந்தை பிறந்துள்ளது. 27 ஆண்டுகளுக்குப் பின் பிறந்துள்ள இந்த குழந்தை உலக சாதனை படைத்துள்ளது.
சுவாரஸ்யம் என்னவென்றால் இந்த குழந்தையின் சகோதரி 24 ஆண்டுகள் பழைய கருவில் இருந்துதான் பிறந்துள்ளது. இந்த குழந்தைக்கு எம்மா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதேநேரத்தில் 24 ஆண்டுகள் கருவிலிருந்து பிறந்த எம்மாவின் சாதனையை தற்போது இந்த குழந்தை தகர்த்துள்ளது. இதுகுறித்து தாயார் கூறியதாவது: “2020 ஆம் ஆண்டு எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய மகிழ்ச்சி இந்த குழந்தை. எம்மா பிறந்தபோது மகிழ்ச்சி அடைந்தோம்.
தற்போது மாலி கிப்சன் வந்த போதும் மகிழ்ச்சி அடைகிறோம். இது இன்னொரு உலக சாதனையை படைத்து விட்டது என்று கூறினார். தானும் தனது கணவரும் குழந்தையின்மையால் போராடி வந்த சூழ்நிலையில் கருவை தத்தெடுத்து குழந்தையை பெற்று உள்ளதாக அறிவித்துள்ளார்.