டுகாட்டி நிறுவனம் தனது புதிய இருசக்கர வாகனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது .
இந்தியாவின் டுகாட்டி நிறுவனம் தனது ஃபிளாக்ஷிப் மோட்டார் சைக்கிளின் விற்பனையை இந்தியாவில் துவங்கிவிட்டது . டுகாட்டி நிறுவனம் பனிகேல் வி 4 ஆர் மொத்தமே இந்தியாவில் ஐந்து யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும் என அறிவித்திருந்தது . இந்நிலையில், புதிய பனிகேல் வி 4 ஆர் மோட்டார்சைக்கிளை வாங்குவதற்காக இருவர் முன்பதிவு செய்துள்ளனர் .
இதில் , இந்தியாவின் டெல்லி என்.சி.ஆர். பகுதியின் விற்பனையாளர் ஒருவர் முன்பதிவு செய்திருந்தார். இதற்குமுன் , நிறுவனம் புதிய மோட்டார்சைக்கிள்களை ஆகஸ்ட் மாதத்திலிருந்தே விற்பனை செய்யப்படும் என்பதால் , இது விரைவில் சர்வதேச அரங்கில் வாடிக்கையாளர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் டுகாட்டி பனிகேல் வி 4 ஆர் மாடலில் 998 சி.சி. திறன் கொண்ட என்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது . இதுமட்டுமின்றி வி-4 மோட்டார் பம்பும் வழங்கப்பட்டுள்ளது . இது 221 ஹெச்.பி. மற்றும் 15,250 ஆர்.பி.எம். மற்றும் 112 என்.எம். (நியூட்டன் மீட்டர்) 11,500 ஆர்.பி.எம். செயல்திறனை கொண்டுள்ளது . இந்த மோட்டார் சைக்கிளில் முதல் முறையாக மோட்டோ ஜி.பி. என்ஜினானது பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி ரேடியல் மவுன்ட் செய்யப்பட்ட நான்கு பிஸ்டன் பிரெம்போ கேலிபர்களும் வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த மோட்டார் சைக்கிள் மணிக்கு 270 கி.மீ. வேகத்தில் செல்லும் என அந்நிறுவனம் கூறியுள்ளது . மேலும் , டுகாட்டி பனிகேல் வி 4 ஆர் மோட்டார்சைக்கிள் விலை ரூ.51.80 லட்சம் என அந்நிறுவனம் கூறியுள்ளது .