ஒருங்கிணைந்த முதுநிலை மருத்துவ படிப்புகளான INI – CET தேர்வு மையம் தொடர்பாக பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த டெல்லி, போபால், புவனேஸ்வர், ஜோத்பூர், நாக்பூர், ராய்ப்பூர் எய்ம்ஸ், நிமான்ஸ், ஜிப்மர் போன்ற நிறுவனங்களில் 6 வருடம் கால அளவு கொண்ட ஒருங்கிணைந்த முதுநிலை மருத்துவ படிப்புக்கு INI – CET என்றழைக்கப்படும் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகின்றது. தமிழ்நாட்டு மாணவர்களுக்கு அண்டை மாநிலமான ஆந்திராவில் உள்ள சித்தூர் மற்றும் நெல்லூர் மாவட்டங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது என்ற கவனத்தை பிரதமருக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் மூலம் கொண்டு சேர்த்துள்ளார்.
தேர்வு மையங்கள் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் இருந்து நீண்ட தூரத்தில் இருப்பதாக கடிதத்தில் தெரிவித்துள்ள முதல்வர், மாணவர்கள் 275 முதல் 350 கிலோ மீட்டர் வரை சென்று தேர்வு எழுத வேண்டியுள்ளது சூழல் உருவாகியுள்ளதாகவும், இதனால் மருத்துவ மாணவர்கள் பரீட்சைக்கு தயாராகும் நேரத்தில் மிகப்பெரிய மன அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடிய செயலாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
எனவே இந்த விஷயத்தில் பிரதமர் தலையிட்டு கூடுதல் மையங்கள் உருவாக்குவதற்கு வழி வகுக்க வேண்டும். தமிழகத்திற்கு அருகிலேயே அல்லது மிக நெருக்கத்தில் தேர்வு மையங்கள் உருவாக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் மூலம் கோரிக்கை வைத்துள்ளார்