பேஸ்புக்-கில் 275 மில்லியன் போலி கணக்குகள் இருக்கலாம் என்று சோஷியல் நெட்வர்க்கிங் சைட் அதிர்ச்சியான தகவல் தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் உள்ள நெட்டிசன்களால் , இணையதள விரும்பிகளால் அதிகம் பயன்படுத்தப்படும் சமூக ஊடகம் பேஸ்புக். இதில் சுமார் 2.5 பில்லியன் பேர் கணக்கு வைத்திருக்கின்றனர் . கடந்தாண்டு இருந்த பேஸ்புக் பயனாளர்களின் எண்ணிக்கையோடு இதனை ஒப்பிடுட்டால் இது 8 சதவீதம் அதிகம் என்று பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, இந்தியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் உள்ள பயனாளர்களின் பயன்பட்டால் பேஸ்புக் அதிகளவு வளர்ச்சி அடைந்ததாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், சோஷியல் நெட்வொர்க்கிங் சைட் என்ற அமைப்பின் வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையில் சமூக ஊடகமான பேஸ்புக்-கில் சுமார் 275 மில்லியன் போலி கணக்குகள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது. இதனால் போலி கணக்குகளை முடக்க வேண்டிய நிலைக்கு பேஸ்புக் நிறுவனம் சென்றுள்ளது.