தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின் மையமாக தலைநகர் சென்னை திகழ்கின்றது. அங்கு மட்டும் 30,444 பேர் பாதிக்கப்பட்டு, 314 பேர் உயிரிழந்துள்ளனர். தலைநகர் சென்னையில் கொரோனவை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
இந்நிலையில் சென்னையில் மே 23 முதல் சூன் 11 வரை கொரோனா உறுதியான 277 பேர் மாயமாகியுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது அனைவரையும் தூக்கிவாரி போட்டுள்ளது.
மாநகராட்சி அளித்த பட்டியலை கொண்டு சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தவறான முகவரி, செல்போன் எண்களை தந்த 277 கண்டறியும் முயற்சியில் போலீசார் தீவிரம் இறங்கியுள்ளார். இது தலைநகர் சென்னை வாசிகளை கூடுதல் அச்சம் கொள்ள வைத்துள்ளது.