கனடாவில் 28 வயதான பிரபல நடிகர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவைச் சேர்ந்த ஜமில் பிரஞ்ச் பிரபல நடிகர் ஆவார். 1991 ஆம் ஆண்டு கனடாவில் உள்ள ரொறன்ரோவில் பிறந்தார். பிரஞ்ச் 2009ஆம் ஆண்டு சினிமா துறைக்குள் நுழைந்துள்ளார். மேலும் பிரஞ்ச் தனது அசத்தலான நடிப்பால் மக்கள் அனைவரையும் கவர்ந்து பிரபல நடிகருமானார்.
இந்நிலையில் தற்போது ஜமீல் பிரஞ்ச் இறந்ததாக அவரின் மேலாளர் கேப்ரில் கூறியுள்ளார். அவர் மரணத்திற்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை. 28 வயதேயான பிரஞ்ச் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரின் இறுதி வாழ்விற்காக அவர்களின் குடும்பத்தார் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து கடவுளை வேண்டிக் கொள்ளுமாறு கேப்ரில் கேட்டுக் கொண்டுள்ளார்.