செபஸ்தியார் ஆலய திருவிழா நேற்று நிறைவு பெற்றுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பாளையம்பட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற புனித செபஸ்தியார் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஜனவரி மாதம் தொடங்கி 28 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் கடந்த 28-ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது .
இந்நிலையில் திருவிழாவின் நிறைவு நாளான நேற்று திருப்பள்ளி நிகழ்ச்சி, வீதிகளில் சப்பரம் பவனி வருதல், போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.