Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

28 பால்…. 27 ரன்…. போச்சே…. “மனமுடைந்து கண்ணீர் விட்டு அழுத ரோஹித்”…. எங்களால பார்க்க முடியல…. சோகத்தில் ரசிகர்கள்.!!

இந்திய அணி அரையிறுதியில் இங்கிலாந்து அணியுடன் தோல்வியடைந்ததால் கேப்டன் ரோஹித் சர்மா கண்ணீர் விட்டு அழுத வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது..

டி20 உலக கோப்பை முதல் அரை இறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்குள் சென்றுள்ளது. இந்நிலையில் இரண்டாவது அரையிறுதியில் இன்று ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி மற்றும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற ஜோஸ் பட்லர் பந்து வீச முடிவு செய்தார்.

அதன்படி இந்திய அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய ராகுல் 5, ரோஹித் சர்மா 27 (28) என அவுட் ஆகிய போதிலும், கோலி, ஹர்திக் பாண்டியா அரைசதத்தால்  இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழந்து 168 ரன்கள் குவித்தது. விராட் கோலி 40 பந்துகளில் 50 ரன்களும், கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய பாண்டியா 33 பந்துகளில் 4 பவுண்டரி, 5 சிக்ஸர் உட்பட 63 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் ஜோர்டன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணியின் துவக்க வீரர்களாக ஜாஸ் பட்லர் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் இருவரும் களமிறங்கினர். இந்த ஜோடி ஓவருக்கு பவுண்டரி, சிக்ஸ் என விளாசி தள்ளினர். ஜாஸ் பட்லர் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் இருவரும் விக்கெட் கொடுக்காமல் ஓவருக்கு 10 ரன் என அடித்துக் கொண்டே வந்தனர். இறுதியில் இங்கிலாந்து அணி 16  ஓவரில் விக்கெட் இழப்பின்றி 170 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

அதிகபட்சமாக அலெக்ஸ் ஹேல்ஸ் 47 பந்துகளில் (4பவுண்டரி, 7 சிக்ஸர்) 86 ரன்களும், பட்லர் 49 பந்துகளில் (9 பவுண்டரி, 3 சிக்ஸர்) 80 ரன்களும் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தனர். இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்து அணி  வருகின்ற 13-ஆம் தேதி இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

 

இந்நிலையில் இந்திய அணி தோல்வி அடைந்த பின் கேப்டன் ரோஹித் சர்மா பெவிலியனில் தனியாக சோகத்தில் உட்கார்ந்து கண்கலங்கி அழுதுள்ளார். பயிற்சியாளர் ராகுல் டிராவிட் சொன்ன சமாதானத்தையும் அவர் ஏற்கவில்லை.. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த டி20 உலக கோப்பை தொடர் ரோகித் சர்மாவுக்கு சிறப்பாக அமையவில்லை.  நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் மட்டுமே அரைசதம் அடித்திருப்பார்.. மற்றபடி சொல்லிக் கொள்ளும் அளவிற்கு அவர் ரன் அடிக்கவில்லை.

எனவே கண்டிப்பாக ரோகித் சர்மா இந்த அரையிறுதி போட்டியில் அதிரடியாக விளையாடி ரன்கள் குவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.. ஆனாலும் இன்றைய போட்டியில் ரசிகர்கள் எதிர்பார்த்தபடி அவர் செயல்படவில்லை. 28 பந்துகளில் 27 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். டி20 கிரிக்கெட்டில் முக்கியமான போட்டியில் இப்படி ஒரு தொடக்கத்தை கொடுத்தால்  பின்னர் வரும் பேட்ஸ்மேனுக்கு மிகவும் சிரமத்தை ஏற்படுத்தி விடும் என ரோகித்தை கிரிக்கெட் ரசிகர்கள் விளாசி வருகின்றனர். கேப்டனுக்கு தகுதி இல்லாதவர், முக்கியமான போட்டிகளில் திணறுகிறார்..

இவரை அனுப்பிவிட்டு புதிய கேப்டனை கொண்டு வர வேண்டும் என்றெல்லாம் கருத்துக்களை கூறிக் கொண்டு வருகின்றனர். அதேபோல கேஎல் ராகுலையும் விளாசி வருகின்றனர். அதே சமயம் சில ரசிகர்கள்  தயவு செய்து கடவுளே, நான் கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன், வலிகள் அனைத்தையும் எனக்குக் கொடுங்கள், ரோஹித்துக்கு கொடுக்காதீர்கள் என்றும், அது அவருடைய தவறாக இருக்கலாம். ஆனால் அவர் அழுவதை என்னால் பார்க்க முடியவில்லை. ரோஹித் சர்மா வலுவாக இருங்கள். உண்மையான ரசிகர்களான எங்களால் உங்களை இப்படி பார்க்க முடியாது என்று சோகத்தில் ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். தற்போது ரோகித் கண்கலங்கி அழுத வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

https://twitter.com/SportyVishal/status/1590670773437763584

 

Categories

Tech |