மன்னராட்சி காலத்தில் நாட்டை ஆளுகின்ற ராஜாக்கள் தனது வம்சத்தை மேலும் விரிவு படுத்த வேண்டும் என்பதற்காக பல திருமணங்கள் செய்துகொண்ட அதிகமான வாரிசுகளைப் பெற்றுக் கொள்வார்கள். அதை நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அதுபோன்ற சம்பவம் ஒன்று தற்போது நிகழ்ந்துள்ளது. வயதான நபர் ஒருவர் இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார். இது அவருக்கு 37 வது திருமணம். அது 28 மனைவிகளுக்கு முன்பு நடந்தது.
அந்த 28 மனைவிகளும் திருமணம் முடிந்த பிறகு அந்த இளம்பெண்ணை உற்சாகமாக வரவேற்கிறார்கள். இந்த வீடியோவை ஐபிஎஸ் அதிகாரி ரூபின் சர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தாத்தாவிற்கு 37 வது திருமணம் என்பதே அதிர்ச்சியாக இருக்கும் போது, அவரது பதிவில் மேலும் பல அதிர்ச்சிகள் காத்திருந்தன. அந்த பதிவில், தைரியமான மனிதர். 37 வது திருமணம் அதுவும் 28 மனைவிகள். 135 குழந்தைகள். 126 பேர குழந்தைகள் முன்னிலையில் என குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
BRAVEST MAN….. LIVING
37th marriage in front of 28 wives, 135 children and 126 grandchildren.👇👇 pic.twitter.com/DGyx4wBkHY
— Rupin Sharma IPS (@rupin1992) June 6, 2021