Categories
தேசிய செய்திகள்

28 ரூபாய்க்காக…. தன்னுடைய உயிரை இழந்த வாலிபர்….. என்ன காரணம் தெரியுமா….?

ஆட்டோ மோதி உயிரிழந்த வாலிபரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குமாறு மோட்டார் வாகன விபத்து ‌தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

மும்பையில் உள்ள விக்ரோலி கிழக்கு என்ற பகுதியில் அமைந்துள்ள தனது வீட்டிற்கு ஆட்டோவில் சேத்தன் அசிர்நகர் (26) என்பவர் சென்றார். அந்த ஆட்டோவை கம்லேஷ் மிஸ்ரா என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் வீடு வந்ததும் சேத்தன் அசிர்நகர் ஆட்டோ ஓட்டுனரிடம் 200 ரூபாயை கொடுத்துள்ளார். இதில் ஆட்டோ கட்டணம் 172 ரூபாய் போக மீதம் 28 ரூபாயை ஆட்டோ ஓட்டுனர் தர வேண்டியிருந்தது. இந்த பணத்தை ஆட்டோ ஓட்டுனர் திருப்பி கொடுக்காமல் ஆட்டோவை எடுத்ததால் சேத்தன் அசிர்நகர் ஆட்டோவைத் சேஸ் செய்தார். அப்போது ஆட்டோ சேத்தன் அசிர்நகர் மீது ஏறியது.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் விபத்தில் சிக்கிய சேத்தன் அசிர்நகரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சேத்தன் அசிர்நகர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இந்த விவகாரமானது மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாயத்திற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாய அதிகாரிகள் உயிரிழந்த வாலிபரின் குடும்பத்தினர் மன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டதால் இன்ஷூரன்ஸ் நிறுவனமும், ஆட்டோ ஓட்டுநரும் சேர்ந்து சேத்தன் அசிர்நகர் குடும்பத்தினருக்கு 43 லட்ச ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |