Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

28 லட்சத்தில் இருந்து 6 லட்சம்…. குறைந்துபோன பயணிகளின் எண்ணிக்கை…. வரும் நாட்கள் கூடுமா…?

கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஏழு மாதங்கள் ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா மூடப்பட்டதால் சுற்றுலா பயணிகளின் வருகை 6 லட்சமாக குறைந்துள்ளது

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா நூற்றாண்டு கால பழமை வாய்ந்ததாகும். இப்பூங்காவில் கோடை சீசனை முன்னிட்டு ஆண்டுதோறும் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. இதனையடுத்து சர்வதேச அளவில் புகழ் பெற்ற இம்மலர் கண்காட்சியை காண வெளிநாடுகள் மற்றும் உள்நாட்டில் இருந்து பல்வேறு சுற்றுலா பயணிகள் இவ்விடத்திற்கு வருவது வழக்கம். ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்கா கடந்த ஆண்டு மார்ச் மாதம் 17ஆம் தேதி மூடப்பட்டது.

இந்நிலையில் சுமார் 7 மாதங்களுக்கு பின் ஊரடங்கில் அறிவிக்கப்பட்ட தளர்வால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி தாவரவியல் பூங்கா திறக்கப்பட்டது. ஆனால் ஊரடங்கிற்கு பின் திறக்கப்பட்ட பூங்காவிற்கு கொரோனா அச்சத்தின் காரணமாக சுற்றுலா பயணிகளின் வருகை குறைவாகவே காணப்பட்டது.அதன்பிறகு விண்ணப்பிக்கும் சுற்றுலா பயணிகள் அனைவருக்கும் இ -பதிவு முறையில் அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்தது. ஆனாலும் 2019 ஆம் ஆண்டை விட 2020 ஆம் ஆண்டில் தாவரவியல் பூங்காவிற்கு வந்த சுற்றுலா பயணிகளின் வருகை குறைவாகவே காணப்பட்டது.

அவ்வகையில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவிற்கு சுமார் 6,20,549 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். ஆனால் இந்த எண்ணிக்கையானது 2019ஆம் ஆண்டு வருகை தந்த 28,11,255 சுற்றுலா பயணிகளின் வருகையை விட குறைவாகும். ஆனால் இப்போது ஊட்டியில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால்  வரும் நாட்களில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையானது இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |