Categories
மாநில செய்திகள்

“28 வருடங்களுக்கு பிறகு” தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு…. விடுக்கப்பட்ட புயல் எச்சரிக்கை…!!

28 வருடங்களுக்கு பிறகு தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் மீண்டும் புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய பெருங்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி தென் தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெற்று தீவிர புயலாக மாற வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் குமரி ஆகிய மாவட்டங்களில் வருகிற 2-ந்தேதி முதல் கனமழை பெய்யும் என்றும் இதன் காரணமாக இந்த 4 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையில் பாபநாசம் மலைப்பகுதியில் 2 மி.மீ மழையும், நெல்லையில் 1 மி.மீ மழையும், சங்கரன்கோவிலில் 1 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது. மேலும் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் குமரி ஆகிய மாவட்டங்களுக்கு வருகிற 2ம் தேதி முதல் “ரெட் அலர்ட்” எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் 20 செ.மீட்டருக்கும் மேல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது.

கடந்த 1992-ம் வருடம் தூத்துக்குடி அருகே புயல் கரையை கடந்த போது பெரு வெள்ளம் ஏற்பட்டு ஏராளமானவர்கள் உயிரிழந்தனர். மேலும் இதனால் பலத்த சேதமும் ஏற்பட்டது. அதன் பிறகு 28 வருடங்கள் கழித்து தற்போது தான் தென் மாவட்டங்களுக்கு புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. மேலும் தாமிரபரணி ஆற்றில் கடந்த மழையின்போது வெள்ளம் ஏற்பட்டது.

அதுபோல வருகிற 2-ந்தேதியும் வெள்ளம் ஏற்பட்டு பாதிப்பு ஏற்படாதபடி தண்ணீர் கடலில் கலக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தாமிரபரணி கரையோர மக்கள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Categories

Tech |