நாளுக்குள் கடவுள் நம்பிக்கையுடன் இணைந்து ராசி பலன்களும் மக்கள் என்ன ஓட்டத்தில் பிரதி பலிக்கின்றது . நம்முடைய வீட்டிலும் , குடும்பத்தில் எந்த செயலை தொடங்கினாலும் நல்ல நேரம், ராசி என்னவெண்று தெரிந்து கொள்ள தினம் தினம் நாள்கட்டியில் கண்டு கழிக்கும் பழக்கம் பலருக்கும் இருந்து வருகின்றது. இந்த நிலையில் மேஷ ராசி முதல் மீனம் ராசி வரை உள்ள 12 ராசிகளின் ராசிபலனை தெரிந்து கொள்ளலாம்.
மேஷம் :
இறைவன் அருளை பரிபூரணமாக கொண்ட மேஷராசி அன்பர்களே.!! இன்றைய நாள் நீங்கள் யோசித்து செயல்பட வேண்டிய நாள் ஆக இருக்கும். அருகில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. மனதில் இனம் புரியாத கவலை மேலோங்கும். அனாவசிய பேச்சை குறைத்துக் கொள்ளுங்கள். இன்று மன தைரியம் அதிகரிக்கும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கொடுக்கல் வாங்கலில் கவனம் இருக்கட்டும். கஷ்டங்கள் ஓரளவு தீரும். பேச்சின் இனிமையால் காரியங்கள் அனைத்தும் கைகூடும். சுப பலன்களை இன்று நீங்கள் பெறக்கூடும்.
எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. பதவிகள் பற்றிய கவலைகள் ஏற்படும். நிதானமாக செய்யும் செயல்கள் வெற்றியை கொடுக்கும். குடும்பத்தில் ஓரளவு மகிழ்ச்சி இருக்கும். மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் செல்லும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுதோ முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுதோ ஆரஞ்சு நிற ஆடை அல்லது ஆரஞ்சு நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்து காரியமு நல்லபடியாக நடக்கும். அதுபோலவே நீங்கள் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்தும் சிறப்பாக இருக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்
ரிஷபம் :
எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிக்க கூடிய திறமையை கொண்ட ரிஷப ராசி அன்பர்களே..!! இன்று புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். பூமி வாங்கும் யோகம் ஏற்படும். ஊர்மாற்றம், இடமாற்றம் செய்வது பற்றிய சிந்தனை உருவாகும். அருகில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டாகும். பகை மட்டும் நட்பாக கூடும். இன்று திடீரென்று கோபம் வரக் கூடும். ஏதாவது ஒரு வகையில் அடுத்தவரிடம் வீண் பேச்சை கேட்க நேரலாம். கவனம் இருக்கட்டும். மற்றவர் செய்கையால் மனவருத்தம் கொஞ்சம் ஏற்படும். நீண்ட நாள் இழுபறியாக இருந்து வந்த பிரச்சினை முடிவுக்கு வரும். தொழில் வியாபாரத்தில் இருந்துவந்த பின்தங்கிய நிலை மாறும்.
நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஆர்டர்கள் உங்கள் கைக்கு வந்து சேரும். வியாபாரப் போட்டிகள் தடை தாமதங்கள் நீங்கும். இன்று நீங்கள் மகிழ்ச்சியாகவே காணப்படுவீர்கள். குடும்பத்தாருடன் வெளியிடங்களுக்கு சென்று பொழுதைக் கழிப்பீர்கள். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் பெறக்கூடும். விளையாட்டில் ஆர்வம் செல்லும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போதோ முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுதோ வெள்ளை நிற ஆடை அல்லது வெள்ளை நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்தும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே காலையில் எழுந்ததும் விநாயகரை மனதார நினைத்து வழிபட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் சிறப்பாகவே இருக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்
மிதுனம் :
துணிச்சல் மிக்க மிதுனராசி அன்பர்களே..!! இன்று சந்தோஷம் அதிகரிக்கும் நாளாக இருக்கும். பணவரவு தாராளமாகவே இருக்கும். தொழில் ரீதியாக புதிய பங்குதாரர்களை சேர்க்க கூடிய எண்ணம் உருவாகும். திருமண முயற்சி அனைத்தும் கைகூடும். நூதன பொருட்களின் சேர்க்கை உண்டாகும். இன்று வீண் பேச்சைக் குறைத்து செயலில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. பணவரவு தாராளமாகவே இருக்கும். கோபத்தை மட்டும் குறைத்துக் கொண்டால் இன்றைய நாள் சிறப்பாக இருக்கும். சகஜ நிலைக்கு திரும்புவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். நண்பர்கள் மூலம் நல்ல தகவல்கள் வந்துசேரும். சக கலைஞர்களுடன் இருந்து வந்த இடைவெளி குறையும். ஆன்மீகம் பயணம் செல்லும் நிலை உருவாகும். மற்றவர்கள் ஆலோசனை கேட்டு உங்களை தேடி வரக்கூடும். உங்களை விட்டுப் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள்.
இன்று வீண் வாக்குவாதம் செய்ய வேண்டிய இடங்களில் நீங்கள் நிற்க வேண்டாம். அது போலவே யாருக்கும் பஞ்சாயத்துக்கள் எதும் பண்ண வேண்டாம். இன்று மாணவர்கள் கல்வியில் ஓரளவு முன்னேற்றம் பெற முடியும். விளையாட்டில் ஆர்வம் செல்லும். விளையாடும் போது கொஞ்சம் கவனமாக விளையாடுங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுதோ முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுதோ பச்சை நிற ஆடை அல்லது பச்சை நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும். அதுபோலவே காலையில் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்குங்கள். அனைத்தும் நல்லபடியாகவே நடக்கும். தயவுசெய்து இதை மட்டும் செய்து பாருங்கள்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் இளம் மஞ்சள் நிறம்
கடகம் :
மன தைரியத்துடன் காரியங்களை எதிர்கொள்ளக்கூடிய கடகராசி அன்பர்களே..!! இன்று எதிரிகள் உதிரியாகும் நாளாக இருக்கும். எந்த காரியத்தையும் எடுத்தோம் முடித்தோம் என்று செய்து முடிப்பீர்கள். வருங்காலத்தைப் பற்றிய சிந்தனை மேலோங்கும். உடல் நலம் சீராகி உற்சாகப்படுத்தும். இன்று எதிலும் ஒரு வேகம் இருக்கும். அடுத்தவர் விஷயங்களில் தலையிடுவதில் மட்டும் கவனமாக இருங்கள். உல்லாச பயணங்கள் செல்ல நேரிடும். எதிலும் அளவுக்கு மீறாமல் இருப்பது நல்லது. ஆடம்பர பொருட்கள் சேரும். தொழில் வியாபாரத்திலிருந்த மெத்தன போக்கு நீங்கி வேகம் பிடிக்கும். தொழில் விஷயமாக வெளியூர் செல்ல நேரிடும். நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஆர்டர்கள் கிடைக்கும். நண்பர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையுடனும் காணப்படுவீர்கள்.
குடும்பத்தில் கலகலப்பான சூழல் நிலவும். கணவன் மனைவிக்கு இடையே அன்பும் இருக்கும். இன்று பிள்ளைகளிடம் நீங்கள் அன்பாக நடந்து கொள்வீர்கள். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். ஆசிரியர்களின் சொல்படி மட்டும் நடந்து கொள்ளுங்கள். அது போல் விளையாடும் போது கொஞ்சம் கவனமாக விளையாடுங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போதோ முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுதோ பச்சை நிற ஆடை அல்லது பச்சை நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்து காரியமும் நல்லபடியாக நடக்கும். அதுபோலவே நீங்கள் இன்று விநாயகர் வழிபாடுடன் இன்றைய நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் சிறப்பாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 8
அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் வெள்ளை நிறம்
சிம்மம் :
தீர ஆலோசித்து காரியங்களை கவனமுடன் செய்யக்கூடிய சிம்மராசி அன்பர்களே..!! இன்று எடுத்த முயற்சிகளில் எளிதில் வெற்றி காணும் நாளாக இருக்கும். சந்தித்தவர்களால் சந்தோஷமும் அதிகரிக்கும். பிள்ளைகளால் உதிரி வருமானம் உண்டாகும். உத்தியோகம் சம்பந்தமாக நல்ல தகவல்கள் வந்துசேரும். இன்று எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கூடுதல் கவனத்துடன் செய்யும் காரியங்கள் சாதகமான பலனை கொடுக்கும். மற்றவர்களை மட்டும் தயவு செய்து அனுசரித்துச் செல்லுங்கள். எல்லா வகையிலுமே நல்லது நடக்கும். பண வரவு சிறப்பாக இருக்கும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பீர்கள். எதிர்ப்புகள் விலகி செல்லும். விருப்பமான நபரை சந்தித்து மகிழ்வீர்கள். இன்று கணவன் மனைவி இடையே அன்பு நீடிக்கும்.
இன்று உறவினர் வகையிலும் உதவிகள் கிடைக்கும். இன்று அனைவரின் ஆதரவு பெற்று சிறப்பாக செயல்படுவீர்கள். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை அடைய கூடும். விளையாட்டில் ஆர்வம் செல்லும். விளையாட்டு துறையில் நல்ல வெற்றி வாய்ப்புகள் வந்து குவியும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுதோ, முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுதோ ஆரஞ்சு நிற ஆடை அல்லது ஆரஞ்சு நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாகவே நடக்கும். இன்று நீங்கள் காலையில் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்தும் நல்லபடியாகவே நடக்கும். தயவுசெய்து இதை நீங்கள் செய்து பாருங்கள்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட திசை : 1 மற்றும் 2
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் நீல நிறம்
கன்னி :
காரியத்தை கண்ணும் கருத்துமாக செய்யக்கூடிய கன்னிராசி அன்பர்களே..!! இன்று வருமானம் அதிகரித்து வளம் பெருகும் நாளாக இருக்கும். வாழ்க்கை தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். மங்கல செய்தி ஒன்று மனை தேடி வந்து சேரும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். சகோதர சச்சரவு விலகி செல்லும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாமர்த்தியமாக செயல்பட்டு மேல் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறக்கூடும். பிடித்தமான இடத்திற்கு வேலை மாற்றம் ஏற்படும். சக ஊழியர்கள் நட்புடன் பழகுவார்கள். குடும்பத்தில் அமைதி குறைவது போல் தோன்றும். இருந்தாலும் மனம் மகிழ்ச்சியாகவே காணப்படும். சகோதரர் வழியில் மட்டும் சின்ன சின்ன சச்சரவுகள் வந்து செல்லும். அதை மட்டும் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்.
பிள்ளைகள் மூலம் பெருமையும் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் குதுகலத்திற்கும் எந்தவித குறையும் இருக்காது. இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் அடைவதற்கு கூடுதலாகவே உழைக்க வேண்டி இருக்கும். விளையாடும் பொழுது ரொம்ப கவனமாக விளையாட வேண்டும். அதை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுது நீலநிற ஆடை அல்லது நீல நிறத்தில் கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாகவே இருக்கும். அதுபோலவே இன்று நீங்கள் காலையில் எழுந்ததும் விநாயகரை மனதார நினைத்து வழிபட்டு இன்றைய நாளை தொடங்குங்கள். அனைத்துமே சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் இளம் பச்சை நிறம்
துலாம் :
சிந்தனையின் சொற்பமாக திகழும் துலாம் ராசி அன்பர்களே..!! இன்று வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும் நாளாக இருக்கும். நட்பு வட்டம் விரிவடையும். வாங்கல் கொடுக்கல்கள் ஒழுங்காகும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். வழக்குகள் அனைத்தும் சாதகமாகும். இன்று நீங்கள் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கலாம். மேலிடத்தை அனுசரித்து செல்வது மட்டும் நல்லது. பணிகள் நிறைவடைய அலைய வேண்டியிருக்கும். புதிய பொறுப்புகள் சிலருக்கு கிடைக்க கூடும். புதிய நட்பு கிடைப்பதுடன் அவரது ஆலோசனையும் வெற்றிக்கு உதவும். ஆனால் எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படுவது மட்டும் நல்லது. பெண்களுக்கு வீண் பேச்சை குறைத்துக் கொண்டு செயலில் ஈடுபடுவது வெற்றியை கொடுக்கும்.
அக்கம் பக்கத்தினரிடம் பேசும் போது கொஞ்சம் கவனமாக பேசுங்கள். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். இன்று மாணவர்கள் ஓரளவு சிறப்பை பெறமுடியும். கல்வியில் ஓரளவு ஆர்வம் கம்மியாகத்தான் இருக்கும். விளையாட்டில் ஆர்வம் செல்லும் பார்த்துக் கொள்ளுங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது, முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுது மஞ்சள் நிற ஆடை அல்லது மஞ்சள் நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்து காரியமும் சிறப்பாகவே இருக்கும். அதுபோலவே காலையில் எழுந்ததும் விநாயகரை மனதார வழிபட்டு இன்றைய நாளை தொடங்குங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம்
விருச்சிகம் :
மனதை அமைதியாகவும் செய்கின்ற செயலை நேர்த்தியாக செய்கின்ற விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று புதிய பாதை புலப்படும் நாளாக இருக்கும். பொருளாதார பற்றாக்குறை விலகிச்செல்லும். புனிதப் பயணங்களை மேற் கொள்ள முன்வருவீர்கள். உள்ளம் மகிழும் சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். எதிர்பார்த்த காரியம் கைகூடும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற வேகத்தில் பணிபுரிவார்கள். சிலருக்கு புதிய பதவி அல்லது புதிய பொறுப்புக்கள் கிடைக்கப் பெறுவார்கள். சிலர் குடும்பத்தை விட்டு வெளியே தங்க நேரிடும். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும். விருந்தினர்களின் வருகை இருக்கும். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க கூடும்.
திருமண முயற்சிகள் அனைத்தும் சாதகமான பலனை கொடுக்கும். பிள்ளைகளுடன் சந்தோசமாக இன்று பொழுதைக் கழிப்பீர்கள். இன்றைய நாள் நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாகவே காண்பீர்கள். இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமடைய கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். விளையாட்டில் கவனம் செல்லும். இன்றைய நாள் நீங்கள் நினைத்தது நடக்கும் நாளாக இருக்கும். அதுபோலவே நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போதோ, முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுதோ மஞ்சள் நிற ஆடை அல்லது மஞ்சள் நிறத்தில் கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்
தனுசு :
தானம் தர்மம் செய்வதில் தாராள குணம் கொண்ட தனுசு ராசி அன்பர்களே.!! இன்று புகழ் மிக்கவர்கள் சந்திப்பு கிட்டும் நாளாக இருக்கும். வருமானம் இன்று சிறப்பாக இருக்கும். இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்கிச் சேர்க்கும் எண்ணம் உருவாகும். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு மதிப்பு கூடும். இன்று தொழில் வியாபாரத்தில் வேகமான போக்கு காணப்படும். சரக்குகளை அனுப்பும் போது மட்டும் பாதுகாப்பாக இருங்கள். பாதுகாப்பாக வையுங்கள். இன்று எந்த ஒரு விஷயத்திலும் எச்சரிக்கையாக நடந்து கொள்ளுங்கள். கிடப்பில் இருந்த கடன்கள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. செய்யும் வேலை பற்றி மனதில் திருப்தியற்ற எண்ணம் உருவாகும், பார்த்துக்கொள்ளுங்கள். அலுவலகம் சம்பந்தப்பட்ட விஷயங்களை மற்றவர்களிடம் கூறாமல் இருப்பது நன்மையை கொடுக்கும்.
முடிந்தால் இன்று நீங்கள் ரகசியத்தை பாதுகாப்பது மிகவும் சிறப்பு. குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை நிலவும். மனமும் நிம்மதியாக காணப்படும். இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமடைய கூடும். விளையாட்டில் அதிக ஆர்வம் ஏற்படும். விளையாட்டை ஏறக்கட்டி விட்டு படிப்பது நல்லது. இன்று படித்ததை எழுதிப் பாருங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போதோ, முக்கியமான காரியத்திற்கு செல்லும் போதோ மஞ்சள் நிற ஆடை அல்லது மஞ்சள் நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்தும் நல்லபடியாக நடக்கும். அதுபோலவே நீங்கள் காலையில் விநாயகரை மனதார வழிபட்டு இன்றைய நாளை தொடங்குங்கள். அனைத்தும் சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் இளம் சிவப்பு நிறம்
மகரம் :
சுய புத்தியும் மன தைரியமும் கொண்ட மகர ராசி அன்பர்களே..!! இன்று பொருமையோடு செயல்பட்டு பெருமை காண வேண்டிய நாளாகயிருக்கும். சான்றோர்களின் சந்திப்பு கிடைக்கும். திட்டமிட்ட பயணம் ஒன்றில் திடீர் மாற்றம் செய்வீர்கள். அதிகாரிகளின் அனுகூலம் உண்டாகும். இன்று குடும்பத்தில் உள்ளவர்களின் செயல்கள் மனவருத்தத்தை கொடுப்பதாக இருக்கலாம். கவனமாக கையாள்வது நல்லது. பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது நன்மையை கொடுக்கும். கணவன் மனைவிக்கிடையே திடீர் மன வருத்தம் ஏற்படும். அதை மட்டும் நீங்கள் கவனத்தில் கொள்ளுங்கள். எந்த விஷயமாக இருந்தாலும் உட்கார்ந்து பேசி தீர்த்துக் கொள்ளுங்கள். பொறுமையை மட்டும் கையாளுங்கள்.
உங்களது பொருட்களை நீங்கள் கவனமாக பாதுகாத்துக் கொள்ளுங்கள். வீண் பிரச்சினைகளில் தலையிடாமல் ஒதுங்கி விடுவதும் நன்மையை கொடுக்கும். யாருக்கும் எந்தவிதமான பஞ்சாயத்துக்கள் செய்ய வேண்டாம். இன்று மாணவர்கள் கொஞ்சம் கடினமாக உழைத்துத்தான் முன்னேற வேண்டியிருக்கும். விளையாட்டில் ஆர்வம் செல்லும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போதோ முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுதோ வெள்ளை நிற ஆடை அல்லது வெள்ளை நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்தும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே காலையில் நீங்கள் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் இளம் மஞ்சள் நிறம்
கும்பம் :
பால் மனம் மாறாத குழந்தை தனம் கொண்ட கும்ப ராசி அன்பர்களே..!! இன்று உங்களுடைய வாழ்க்கை தரம் உயரும் நாளாக இருக்கும். வருமானம் எதிர்பார்த்ததை விட கூடுதலாகவே கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கிச் சேர்க்கும் எண்ணம் மேலோங்கும். விரதம் வழிபாடுகளில் நம்பிக்கை வைப்பீர்கள். இன்று இழுபறியான நிலை மாறி மனம் மகிழும் படியான சூழ்நிலை நிலவும். எல்லாம் நல்லபடியாகவே நடக்கும். தொழில் மட்டும் கொஞ்சம் மந்தமாகத்தான் இருக்கும். அதை பற்றி எல்லாம் கவலை படாதீர்கள். அது சரியாகிவிடும். பழைய பாக்கிகள் வசூலாவதில் கொஞ்சம் தாமதம் இருக்கும். கொடுக்கல் வாங்கல் கொஞ்சம் சிறப்பை கொடுக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். இருந்தாலும் மற்றவர்கள் பார்வையில் படும் படி பணத்தை மட்டும் எண்ண வேண்டாம். உங்களுடைய பணிகள் தொடர்பான பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். மேலிடத்தில் இருப்பவர்களிடம் இருந்து மனம் நோகும்படி யான வார்த்தைகள் வெளிப்பட கூடும்.
அந்த விஷயத்தில் கவனமாக இருங்கள். மேலதிகாரிகளை மதித்து பேசுங்கள். அது போதும். அனைவரையும் அனுசரித்துச் செல்லுங்கள். எதிர்பாராத மனவருத்தங்கள் திடீரென ஏற்படக்கூடும். குடும்பத்தாரிடம் கொஞ்சம் நட்பாக பழகும் போது கவனமாக பேசுங்கள். உங்களுடைய வார்த்தைகளில் தான் அனைத்து விஷயங்களும் இருக்கிறது. அதை நீங்கள் புரிந்து கொண்டு அதற்கேற்ப நடந்து கொண்டால் அனைத்து விஷயங்களும் சிறப்பாக நடக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை அடையக்கூடும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுதோ முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுதோ வெள்ளை நிற ஆடை அல்லது வெள்ளை நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்தும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே நீங்கள் காலையில் எழுந்ததும் மனதார விநாயகரை வழிபட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்து காரியங்களும் சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் காவி நிறம்
மீனம் :
உடல் கவர்ச்சியும் மிருதுவான மனமும் கொண்ட மீனம் ராசி அன்பர்களே..!! இன்று தேக நலனில் தெளிவு பிறக்கும் நாளாக இருக்கும். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். பாதியில் நின்ற பணிகளை ஒவ்வொன்றாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். இன்று கவனமாக அடுத்தவரிடம் பழகுவது மட்டும் நல்லது. விரும்பாத இடமாற்றம் ஏற்படலாம். குறிக்கோளின்றி வீணாக அலைய நேரிடும். செலவும் அதிகரிக்கும். சகோதரர்கள் மூலம் நன்மை ஏற்படும். மன தைரியம் கூடும். புதிய நட்பு கிடைக்கும். எதிலும் எச்சரிக்கை என்பதை மட்டும் மறந்துவிடாதீர்கள். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத தடங்கல்கள் கொஞ்சம் வரக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள்.
பணவரவு இருந்தாலும் தேவை மட்டும் அதிகரிக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். வாடிக்கையாளரிடம் பேசும் போது கவனம் இருக்கட்டும். இன்று மாணவர்கள் கல்வியில் கொஞ்சம் முன்னேற்றம் அடையக்கூடும். விளையாட்டில் அதிகப்படியான ஆர்வம் இன்று இருக்கும். இன்று நீங்கள் வெளியிடங்களுக்கு செல்லும் போதோ முக்கியமான பணியை மேற்கொள்ளும் போதோ மஞ்சள் நிற ஆடை அல்லது மஞ்சள் நிறத்தில் கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாகவே இருக்கும். நீங்களும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். அதுபோலவே காலையில் நீங்கள் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்கினால் நீங்கள் செய்யக்கூடிய காரியங்கள் வெற்றியை கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் காவி நிறம்