கோவிசீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் வெளிநாடுகளுக்கு படிக்கவோ, வேலை செய்யவோ அல்லது ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் செல்ல வேண்டியிருந்தால் இரண்டாவது தவணை தடுப்பூசி நிர்ணயிக்கப்பட்ட 84 நாட்களுக்கு பதிலாக 28 நாட்களிலேயே செலுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்தியாவில் பரவி வரும் தொற்று காரணமாக மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்தியாவில் தற்போது கோவாக்சின் மற்றும் கோவிசீல்டு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. கோவாக்சின் முதல் டோஸ் போட்டவர்கள் அடுத்து 45 தினங்களுக்கு பிறகு இரண்டாவது டோஸ் போட்டுக்கொள்ளலாம். கோவிசீல்டு தடுப்பூசி போட்டவர்கள் அடுத்த 84 தினங்களுக்குப் பிறகு மற்றொரு டோஸ் போட வேண்டும். இந்நிலையில் வெளிநாடுகளுக்கு படிக்க செல்பவர்கள், வேலைக்கு செல்பவர்கள், அல்லது ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க செல்பவர்கள் இரண்டாவது தவணை தடுப்பூசி 84 நாட்களுக்கு பதிலாக 28 நாட்களிலேயே செலுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.