Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

28 நாட்கள்….. 10, 220 கி.மீ …… 318 கோயில்….. சாதனை நிகழ்த்தும் இரட்டையர்கள் …!!

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர், கின்னஸ் சாதனைக்காக இந்தியாவில் உள்ள 501 கோயில்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் வேலங்குடியைச் சேர்ந்தவர்கள் பாண்டித்துரை, கார்த்திகேயன். சகோதரர்களான இவர்கள் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறுவதற்காக இந்தியாவில் உள்ள பழமையான 501 கோயில்களுக்குச் செல்ல சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் இந்த சுற்றுப்பயணத்திற்காக எடுத்து கொண்டுள்ள மொத்தப் பயணத்தொலைவு 13,000 கி.மீ ஆகும்.

நவம்பர் 7ஆம் தேதி தங்கள் கின்னஸ் பயணத்தைத் தொடங்கிய இவர்கள், இதுவரை சுமார் 28 நாட்களில் 318 கோயில்களின் பயணத்தை முடித்துள்ளனர். இவர்கள் நேற்று பிலாஸ்பூரில் உள்ள நைனா தேவி கோயிலுக்குச் சென்று வணங்கியுள்ளனர்.

பின்னர் இதுகுறித்து அவர் பேசுகையில், ‘ தங்கள் பயணத்தை வேலங்குடியில் உள்ள கணேசன் கோயிலில் தொடங்கியதாகவும் அடுத்து கன்னியாகுமரிக்கு சென்றதாகவும் இந்தப் பயணத்தை தங்களின் கிராமத்தில் உள்ள பெரியநாயகி அம்மன் கோயிலோடு நிறைவு செய்ய உள்ளதாகவும்’ தெரிவித்தனர்.

மேலும் தற்போது வரை 10, 220 கி.மீ., தூரம் பயணித்த இவர்கள் இன்னும் 182 கோயில்களுக்குச் செல்ல உள்ளதாகவும்; இளைஞர்களை ஆன்மிகப் பாதையில் ஈடுபடுத்த வேண்டுமென்பதும்; கின்னஸ் மற்றும் லிம்கா புத்தகத்தில் இடம்பெற செய்ய வேண்டுமென்பதும் தான் இந்த பயணத்தின் நோக்கம் என்று அவர்கள் கூறினர்.

Categories

Tech |